1. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை.
நான் யார்?
2. எவர் கையிலும் சிக்காத கல், எங்கும் விற்காத கல்.
அது என்ன?
3. எத்தனை தடவை சுற்றினாலும் தலை சுற்றாது.
அது என்ன?
4. காலால் தண்ணீர் குடித்து, தலையால் முட்டையிடுவான்.
அவன் யார்?
5. சுடாத இரட்டை குழல் துப்பாக்கி.
அது என்ன?
6. உடம்பு இல்லாத எனக்கு தலையுடன், பூ உண்டு.
நான் யார்?
7. உரச உரச கரைவான், பூச பூச மணப்பான்.
அவன் யார்?
8. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான்.
அவன் யார்?
9. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைப்பது.
அது என்ன?
10. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான்.
அவன் யார் ?
விடைகள்:
1. நிழல்
2. விக்கல்
3. மின் விசிறி
4. தென்னைமரம்
5. மூக்கு
6. நாணயம்
7. சந்தனம்
8. பூரி
9. தூக்கம்
10. அலாரம்
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.