1. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலேச் சிவந்த வாய்.
அவள் யார்?
2. வடிவழகு மாப்பிள்ளை, வயிற்றாள் நடக்கிறார்.
அவர் யார்?
3. உடம்பெல்லாம் பல்லிருந்தாலும், அவளுக்குக் கடிக்கத் தெரியாது.
அவள் யார்?
4. வட்ட வட்ட நிலவில் வரைந்திருக்குது, எழுதியிருக்குது.
அது என்ன?
5. இரவு வீட்டுக்கும் விருந்தாளியாகும் வரும் இவன். காலையில் சொல்லாமக் கொள்ளாமல் போய்விடுவான்.
அவன் யார்?
6. எத்தனை தரம் சுற்றினாலும், இவனுக்குத் தலை சுற்றாது.
அது என்ன?
7. அம்மா படுத்திருக்க, மகள் மட்டும் ஓடித் திரிகிறாள்.
யார் அவர்கள்?
8. காற்றைக் குடித்து, காற்றிலேப் பறப்பான்.
அவன் யார்?
9. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது.
அது எது?
10. கல்லில் காய்க்கும் பூ. தண்ணீரில் மலரும் பூ.
அந்தப் பூ எது?
விடைகள்:
1. கிளி
2. பாம்பு
3. சீப்பு
4. நாணயம்
5. நிலவு
6. மின் விசிறி
7. அம்மி, குளவி
8. பலூன்
9. வேர்க்கடலை
10. சுண்ணாம்பு
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.