1. சூடுபட்டுச் சிவந்தவன், வீடுகட்ட உதவுவான்.
அவன் யார்?
2. கள்ளனுக்குக் காவல், காற்றுக்குத் தோழன்.
அவன் யார்?
3. முன்னும் பின்னும் போவான். ஆனால், ஒற்றைக் காலில் நிற்பான்.
அவன் யார்?
4. கண் இல்லாதவன், பார்வையிழந்தவர்க்குப் பாதை காட்டுவான்.
அவன் யார்?
5. ஒற்றைக்காலில் சுற்றிடுவான்; ஓய்ந்து போனால் படுத்திடுவான்.
அவன் யார்?
6. கேட்டால் பேசமாட்டான், இரண்டு போட்டால் பேசுவான்.
அவன் யார்?
7. நடுவே இருக்கும் கருப்பனுக்கு நாலு புறமும் வெள்ளையர் காவல்.
அவன் யார்?
8. பால் இல்லாமல் பருப்பான்; நோய் இல்லாமல் இளைப்பான்.
அவன் யார்?
9. பாதாளத்தில் பிறந்தவன்; பம்பரத்தில் சுழன்றவன்; வெய்யிலில் காய்ந்தவன்; எல்லோர் வீட்டிலும் இருப்பவன்.
அவன் யார்?
10. பாட்டுப்பாடி வருவான்;பட்டென்று அடித்தால் சாவான்.
அவன் யார்?
விடைகள்:
1. செங்கல்
2. சன்னல்
3. கதவு
4. கைத்தடி
5. பம்பரம்
6. மத்தளம்
7. சிலேட்டு
8. நிலா
9. பானை
10. கொசு
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.