1. இரண்டு வீட்டுக்கும் ஒரே முற்றம்.
அது என்ன?
2. கல்லாலும்,மண்ணாலும் கட்டாத வீடு, காற்றிலே ஆடும் வீடு.
அது என்ன?
3. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்.
அது என்ன?
4. சேலம் சிவப்பு, செவ்வாய் பேட்டை கருப்பு, உடைச்சா பருப்பு திண்ண கசப்பு.
அது என்ன?
5. செத்தவன் சந்தையில் நல்ல விலை போகிறான்.
அது என்ன?
6. கல்லுக்கு அடியில் வில்.
அது என்ன?
7. வெட்ட வெட்டத் தழைவான் ஆனால் கண்டுக்காமல் விட்டால் உதிர்ந்து விடுவான்.
அவன் யார்?
8. உனக்கும் எனக்கும் வரும், ஊருக்கும் வரும். ஆனால் யாருக்கும் தெரியாது.
அது என்ன?
9. வானத்தில் பறந்து போகும்; பறவையல்ல, வட்டமிட்டுச் சுற்றிடும்; விமானமல்ல.
அது என்ன?
10. நம் தலையில் விழுவதைத் தன் தலையில் தாங்கிக் கொள்ளும்.
அது என்ன?
விடைகள்:
1. மூக்கு
2. தூக்கணாங்குருவிக் கூடு
3. வெண்டைக்காய்
4. குண்டுமணி
5. கருவாடு
6. தேள்
7. முடி
8. தூக்கம்
9. பட்டம்
10. குடை
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.