1. ஒல்லியான மனிதன்; ஒரு காது மனிதன். காது போனால் பயனில்லாமல போவான்.
அவன் யார்?
2. முதுகை அழுத்தினால் மூச்சு விடுவான். பல்லை அழுத்தினால் பாட்டு பாடுவான்.
அவன் யார்?
3. உருவம் இல்லாதவன். ஆனால், சொன்னைதைத் திருப்பிச் சொல்வான்.
அவன் யார்?
4. ஆகாயத்திலிருப்பவன். ஆற்றிலும் விழுவான்; குளத்திலும் விழுவான். ஆனாலும், நனையமாட்டான்.
அவன் யார்?
5. வாயில் இருந்து நூல் போடுவான், மந்திரவாதி இல்லை; கிளைக்கு கிளை தாவுவான் ஆனால் குரங்கு இல்லை; வலை விரித்து பதுங்கி இருப்பான் ஆனால் வேடன் இல்லை.
அவன் யார்?
6. ஊர் முழுவதும் சுற்றி வரும் அவனை வீட்டுக்குள்ளே விட மாட்டார்கள்.
அவன் யார்?
7. இவனுக்குத் தலையில்லாவிட்டாலும், எந்தத் தலையையும் சுமப்பதில் கெட்டிக்காரன்.
அவன் யார்?
8. உரச உரசக் குழைவான், பூசப் பூச மணப்பான்.
அவன் யார்?
9. உடம்பில்லாத ஒருவன் பத்து சட்டை அணிந்து கொண்டிருக்கிறான்.
அவன் யார்?
10. காற்றைக் குடித்து, காற்றில் பறப்பான்.
அவன் யார்?
விடைகள்:
1. ஊசி
2. ஆர்மோனியம்
3. எதிரொலி
4. சூரியன்
5. சிலந்தி
6. செருப்பு
7. தலையணை
8. சந்தனம்
9. வெங்காயம்
10. பலூன்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.