1. வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை.
அது என்ன?
2. எத்தனை தடவை சுற்றினாலும் தலை சுற்றாது.
அது என்ன?
3. கவசத்துடன் பிறந்தவன் அவன். ஆனால் கர்ணன் அல்ல.
அவன் யார்?
4. வந்தாலும் பிரச்சனை, வரவில்லை என்றாலும் பிரச்சனை.
அவன் யார்?
5. ராஜா உண்டு, ராணி உண்டு, ஏன் மந்திரியும் உண்டு. ஆனால் நாடு இல்லை.
அது என்ன?
6. உடம்பு இல்லாத அவனுக்கு தலையுடன், பூவும் உண்டு.
அவன் யார்?
7. எல்லோருக்கும் கிடைக்காத மதி, ஆனால் எல்லோரும் விரும்பும் மதி.
அது என்ன?
8. நிலத்தில் நிற்காத செடி, நிமிர்ந்து நிற்காத செடி.
அது என்ன?
9. ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடபான்.
அது என்ன?
10. வால் உள்ள பையன், காற்றில் பறக்கிறான்.
அது என்ன?
விடைகள்:
1. முட்டை
2. மின் விசிறி
3. ஆமை
4. மழை
5. சீட்டுக்கட்டு
6. நாணயம்
7. நிம்மதி
8. முடி
9. கடிகார முட்கள்
10. பட்டம்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.