விடை தெரிந்தால் சொல்லுங்க...?
சித்ரகலா செந்தில்குமார்
1. அழுவேன், சிரிப்பேன். நான் யார் தெரியுமா?
2. இவன் வாளுக்கு இவ்வுலகமே நடுங்கும். இவன் யார் தெரியுமா?
3. பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். இவன் யார்?
4. வெளிச்சத்தில் வரும் இவன் இருட்டாயிருந்தால் காணாமல் போய்விடுவான். இவன் யார்?
5. கண்ணுக்குத் தெரியாது. ஆனால் உயிருக்கு உடைமை இது. யார் இது?
6. வெள்ளை மாளிகைக்குள் மஞ்சள் புதையல். அது என்ன?
7. அள்ள அள்ளக் குறையாது குடிக்க உதவாது. அது என்ன?
8. நாலு கால் உண்டு. ஆனால் வீசத்தான் வாலில்லை. இவன் யார்?
9. மண்ணுக்குள் இருந்திருந்தாலும் மங்களத்துக்கு இது முதலிடம். இது என்ன?
10. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
விடைகள்:
1. முகம் பார்க்கும் கண்ணாடி
2. தேள்
3. சீப்பு
4. நிழல்
5. காற்று
6. முட்டை
7. கடல்நீர்
8. நாற்காலி
9. மஞ்சள்
10. நாக்கு
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.