1. கோயிலைச் சுற்றிக் கறுப்பு; கோயிலுக்குள்ளே வெளுப்பு.
அது என்ன?
2. அரைச்சாண் குள்ளனுக்கு கால் சாண் தொப்பி.
அது என்ன?
3. குளித்தால் கறுப்பு; குளிக்காவிட்டால் சிவப்பு.
அது என்ன?
4. நடக்கத் தெரியாதவன், நடப்பவனுக்கு வழிகாட்டுகிறான்.
அது என்ன?
5. இரவிலேப் பிறந்த இளவரசனுக்கு, தலையிலேக் குடை.
அது என்ன?
6. பட்டுப்பை நிறைய பவுன் காசு.
அது என்ன?
7. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல்.
அது என்ன?
8. எவரும் ஏற முடியாத மரம், கிளைகளில்லாத மரம்.
அது என்ன?
9. கோணலாக இருந்தாலும், குணமும் சுவையும் குறையாது.
அது என்ன?
10. வீட்டுக்கு வந்த விருந்தாளிதான். ஆனால், வரவேற்க ஆளில்லை.
அது என்ன?
விடைகள்:
1. சோற்றுப்பானை
2. பேனா
3. நெருப்பு
4. கைகாட்டி
5. காளான்
6. மிளகாய்
7. முட்டை
8. வாழை மரம்
9. கரும்பு
10. செருப்பு
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.