1. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்.
அது என்ன?
2. எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம்; எவராலும் பார்க்க இயலாத கடிகாரம்.
அது என்ன?
3. காது பெரிசு; கேளாது, வாய் பெரிசு பேசாது, வயிறு பெரிசு உண்ணாது.
அது என்ன?
4. நடக்க முடியாது; ஆனால் நகராமல் இருக்காது.
அது என்ன?
5. தட்டுப் போல் இருக்கும். அதில் சொட்டுத் தண்ணீர் ஒட்டாது.
அது என்ன?
6. பார்க்கப் பச்சை, பழுத்தால் சிவப்பு. பல்லிலே பட்டால் கண்ணிலே நீர்.
அது என்ன?
7. கரை உண்டு; படிக்கட்டு இல்லை. தலைப்பு உண்டு; கட்டுரை இல்லை.
அது என்ன?
8. கையில் பந்தாடும்; கதிரவனுடன் போராடும். கனலுக்கு இரையாகும்; கரி சாம்பல் பொடியாகும்.
அது என்ன?
9. அடிமலர்ந்து நுனி மலராத பூ.
அது என்ன?
10. வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை; வழியும் இல்லை.
அது என்ன?
விடைகள்:
1. வானம்
2. இதயம்
3. அண்டா
4. கடிகாரம்
5. தாமரை இலை
6. மிளகாய்
7. புடவை
8. வரட்டி
9. வாழைப்பூ
10. முட்டை
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.