1. உணவை எடுத்திடுவாள், உண்ணாமல் வைத்திடுவாள், உடல் மெலிந்த பெண்.
அவள் யார்?
2. தாய் இனிப்பு, மகள் புளிப்பு, பேத்தி தித்திப்பு.
இவர்கள் யார்?
3. வெள்ளையாம் வெள்ளைக் குடம், விழுந்தால் சல்லிக்குடம்.
எந்தக் குடம்?
4. ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை.
அவன் யார்?
5. கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் இதுமுருகன் இடம்.
எந்த இடம்?
6. விரலில்லாமல் ஒரு கை.
அது என்ன?
7. தனித்து உண்ண முடியாது என்றாலும், இதைச் சேர்த்தால்தான் உணவுக்கு சுவை.
அது என்ன?
8. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது.
அது என்ன?
9. நாலு மூல சதுக்கம். அம்பது பேரு அடக்கம்.
அது என்ன?
10. மூன்று பெண்களுக்கும் ஒரே முகம். மூத்தப் பெண் ஆற்றிலே; நடுப்பெண் காட்டிலே; கடைசிப்பெண் வீட்டிலே...!
யார் இவர்கள்?
விடைகள்:
1. அகப்பை
2. பால், தயிர், நெய்
3. முட்டை
4. மூச்சு
5. பழனி
6. உலக்கை
7. உப்பு
8. பாம்பு
9. தீப்பெட்டி
10. முதலை, உடும்பு, பல்லி.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.