விடை சொல்லுங்க...!
சித்ரகலா செந்தில்குமார்
1. முன்னால் போனால் எவரையும் காட்டும்;
முதுகை உரித்தால் எதையுமே காட்டாது - அது என்ன?
2. ஒரே குளத்தில் ஒரே மீன்.
வெளியே எட்டிப் பார்த்தாலும்
வேறு குளம் போகாது - அது என்ன?
3. வேகமாய்ப் போகிற அம்மணிக்கு,
விழுந்த கைக்குட்டையை எடுக்க நேரமில்லை. - அது என்ன?
4. என் பெயரைக் கேட்பவர் பலர்.
என்னைப் போட்டு மிதிப்பவரும் பலர்.
நான் யார் பெயரையும் கேட்பதுமில்லை;
எவரையும் போட்டு மிதிப்பதும் இல்லை. - நான் யார்?
5. வெள்ளை வெள்ளைச் சீமாட்டிக்கு
விளக்கு எரியுது தலைக்கு மேலே. - யார் இவள்?
6. காலையில் கடை திறக்கும்
இரவு வந்தால் இறுக மூடும்.- என்ன இது?
7. கஷ்டப்பட்டு நூல் நூற்பார்;
கட்டிக் கொள்ளத் துணியில்லை. - யார் இவர்?
8. உயிரில்லாத நீதிபதி
ஒழுங்காய்த் தீர்ப்பு வழங்குவார். - யார் இவர்?
9. மேலே செல்லும்; விமானம் அல்ல.
தண்ணீர் உண்டு; நதியும் அல்ல. - என்ன இது?
10. அங்குல மாட்டுக்கு
அரைமைல் வால். - என்ன இது?
விடைகள்:
1. கண்ணாடி
2. நாக்கு
3. பறவை இறகு
4. தெரு
5. மெழுகுவர்த்தி
6. கண்கள்
7. சிலந்தி
8. தராசு
9. மேகம்
10. ஊசி நூல்
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.