வெளிநாட்டு விடுகதைகள் - அது எது?
சித்ரகலா செந்தில்குமார்
கனடா
1. உனக்குச் சொந்தமான பொருள்;
ஆனால், உன்னைவிட அதிகமாய் உபயோகிப்பார் மற்றவர்கள். - அது எது?
ஐக்கிய அமெரிக்கா
2. முன்னால் போனால்
எவரையும் காட்டும்;
முதுகை உரித்தால்
எதையுமே காட்டாது. - அது எது?
கெய்ட்டி
3. முன்னால் போனால்
எவரையும் காட்டும்;
முதுகை உரித்தால்
எதையுமே காட்டாது. - அது எது?
மேற்கிந்தியா
4. அப்பா வீட்டுக் குதிரை
அற்புத மான குதிரை.
காதைப் பிடித்தால்
வாயால் கடிக்கும்! - அது எது?
பிரான்சு
5. வாலைப் பிடித்து இழுக்க இழுக்க
வளர்ந்து கொண்டே போகும். - அது எது?
டென்மார்க்
6. சாப்பாட்டுக்கு அவசியம்;
தனியாய்த் தின்ன முடியாது. - அது எது?
செக்கோஸ்லோவேக்கியா
7. குளத்துக்குள்ளே விழுந்தாலும்
கொஞ்சமும் நீர் அலையாது. - அது எது?
யுகோஸ்லேவியா
8. பகலிலே சும்மாயிருக்கும்.
இரவிலே ஆளைச் சுமக்கும். - அது எது?
இஸ்ரேல்
9. மேலே செல்லும்; விமானம் அல்ல.
தண்ணீர் உண்டு; நதியும் அல்ல. - அது எது?
அரேபியா
10. ஆனை போலப் பெரிதாயிருக்கும்;
அடக்கிப் பிடித்தால் கையில் இருக்கும். - அது எது?
விடைகள்:
1. பெயர்
2. கண்ணாடி
3. நாக்கு
4. கத்தரிக்கோல்
5. நூல்கண்டு
6. உப்பு
7. சூரிய ஒளி
8. படுக்கை
9. மேகம்
10. கொசு வலை
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.