பஞ்சு மிட்டாய் சுவைக்காத சிறியவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். பஞ்சு மிட்டாயின் சுவை சிறுவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்றால் அது இப்போதும் மறுப்பதற்கில்லை. இந்தப் பஞ்சு மிட்டாயை ஒரு பல் மருத்துவர்தான் கண்டுபிடித்தார் எனபது உங்களுக்குத் தெரியுமா?
பல் மருத்துவர் வில்லியம் மோரிசன் மற்றும் மிட்டாய் தயாரிப்பாளர் ஜான் சி. வார்டன் ஆகியோர் இயந்திரத்தால் சுழற்றி எடுக்கப்படும் பஞ்சு மிட்டாயை 1897 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தனர். இது முதன்முதலில் 1904 உலக கண்காட்சியில் “ஃப்பெய்றி ஃப்ளோஸ்” (fairy floss) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், இன்னொரு பல் மருத்துவரான ஜோசப் லாஸ்காக்ஸ் 1921 ஆம் ஆண்டில் இந்த இயந்திரத்தை மீண்டும் கண்டுபிடித்தார். அவர் அதற்கு “காட்டன் கேண்டி” என்ற பெயரைக் கொண்டு வந்தார். அதன் பிறகு, நம் ஊரில் இது பஞ்சு மிட்டாய் ஆகிப் போனது.