* உலகின் மிகப் பெரிய எரிமலை, ஹவாய் தீவுகளில் உள்ள மௌனாலோ.
* உலகின் மிக வெப்பமான பகுதி லிபியா.
* உலகில் முதன்முதலில் தபால் தலையில் தோன்றிய நடிகை கிரேஸ் கெல்வி (அமெரிக்கா).
* உலகிலேயே அதிக அளவு காற்று வீசுமிடம் போர்ட் மார்டின் (அண்டார்டிகா)
* பின்லாந்து நாட்டில் வளரும் பைன் மரங்க்ளின் வேர்கள் பூமிக்குள் சுமார் 50 கிலோ மீட்டர் ஆழம் வரைச் செல்லும்.
* ஓக் மரத்தின் வேர்களையெல்லாம் தொடர்ச்சியாக வைத்தால் அது சுமார் 40000 கிலோ மீட்டர் நீளமிருக்கும்.
* காஸ்பிகா எனும் பாலைவனத் தாவரத்தின் தண்டை விட வேர்கள் 14 மடங்கு நீளமானவை.
* மாங்ரோவ் மரங்களின் வேர்கள் நீருக்கு மேலே வளர்ந்து சுவாசிக்கின்றன.
* குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பது போல், பிலிப்பைன்ஸ் நாட்டில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை வயலட் நிறத்தில் காணப்படும் லிம்பா என்ற மலர் மலர்கிறது.
* நத்தைகளில் ஆண் பெண் பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு நத்தைக்கும் இரு தன்மைகளும் அமைந்து இருக்கும். நத்தைக்குப் பற்கள் கிடையாது. சிறிய தசை நார்கள்தான் பற்களாக அமைந்திருக்கும். இத்தசை நார்கள் ஏறக்குறைய 25000 வரை எண்ணிக்கையில் இருக்கும்.
* கரப்பான் பூச்சியில் 400 வகைகள் உள்ளன. இவையனைத்தும் வெப்பமண்டல நாடுகளிலேயேக் காணப்படுகின்றன.
* ஒரு பெண் மூட்டைப்பூச்சி உணவு எதுவுமே உட்கொள்ளாமல் சுமார் 9 மாதங்கள் வரை உயிர் வாழும்.
* ஈ போன்ற சிறிய பூச்சிகள் பறந்து செல்லும் போது ஒரு வினாடிக்குள் 200 தடவை தங்கள் இறகுகளை அடித்துக் கொள்கின்றன.
* சாதாரணமாகக் காணப்படும் சிலந்திகள், தங்கள் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக முட்டைகளை இடும்.
* மூங்கில் மிக உயரமாக வளரும் வரை, கிளைகள் விடுவதில்லை. பின்பு சிறிய கிளைகள் அடர்த்தியாக வளரத் தொடங்கும். மூங்கில் பூக்கள் பச்சை நிறம் கொண்டவை. இவை சிறிய கதிர்களாக அடர்த்தியாகக் காணப்படும். பூக்களிலிருந்து தானியம் போன்ற விதைகள் கிடைக்கின்றன. மூங்கில்களில் பெரும்பாலானவை பல ஆண்டுகள் வாழ்ந்து ஒரே தடவை பூத்துப் பிறகு, சிறிது காலத்தில் பட்டுப் போகக்கூடியவை. சில இனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் கொண்டு உயிர் வாழும். மற்றும் சில ஆண்டுதோறும் பூக்கும்.
* கடலுக்கு இயற்கையாக நிறமில்லை. கடலில் 36 கோடி இன உயிரினங்கள் வாழ்கின்றன. பசிபிக் பெருங்கடலை நெருப்பு வளையம் என்பர். கடல் பாசியிலிருந்து பல்வலி மருந்து தயாரிக்கப்படுகிறது. கடலிலுள்ள 600 வகை உயிரினங்கள் தானாக ஒளி வீசக்கூடியவை.
* ஒரு தாய் இறால் மீன் 5 லட்சம் குஞ்சுகள் பொரிக்கும்.
* திமிங்கிலத்துக்கு 20000 பற்கள் வரை உண்டு.