சிலந்திகள் எட்டு கால்களைக் கொண்ட ஆர்த்ரோபாட்கள் (Arthropods) எனும் வகையைச் சேர்ந்தவை. பூச்சிகளைக் காட்டிலும் அதிகமான கால்கள் மற்றும் வெவ்வேறு உடல் பாகங்கள் உள்ளன. மேலும் இவை பூச்சிகளைப் போலவே நகராது. சிலந்திகள் அராக்னிட் (Arachnid) வகுப்பில் உள்ளன, ஆனால் அனைத்து அராக்னிட்களும் சிலந்திகள் அல்ல. சிலந்திகளில் சுமார் 40,000 இனங்கள் வரை அறியப்பட்டுள்ளன. பெரும்பாலான சிலந்திகள் தங்கள் இரையைப் பிடிக்க வலையைப் பயன்படுத்துகின்றன.
மேலும் சில(ந்தி) தகவல்கள்:
* உலகின் மிகப்பெரிய சிலந்தி “கோலியாத் டரான்டுலா” ஆகும். இவ்வகைச் சிலந்திகளால், பறவைகளைப் பிடிக்க முடியும். உலகின் மிகச்சிறிய சிலந்தி 1 மி.மீ.க்கும் குறைவான நீளம் கொண்டது.
* சிலந்திகள் பூச்சிகளைப் போன்ற ஆர்த்ரோபாட்கள் வகையைச் சேர்ந்தது. இவை உட்புறத்திற்குப் பதிலாக (மனிதர்களைப் போலல்லாமல்) வெளிப்புற எலும்புக்கூடுகளைக் கொண்டுள்ளன.
* சிலந்திகளுக்கும் பூச்சிகளுக்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன, அவற்றில் ஒன்று, கால்களின் எண்ணிக்கை. அனைத்துச் சிலந்திகளுக்கும் எட்டுக் கால்கள் உள்ளன.
* சிலந்தி உடல்கள், தலைநெஞ்சு மற்றும் வயிறு எனும் இரண்டு முக்கிய பகுதிகளால் ஆனது.
* சிலந்திகள் தங்கள் வயிற்றில் உள்ள பின்னல் சுரப்பிகளில் இருந்து பட்டு வலைகளை உருவாக்குகின்றன.
* சிலந்தி வலையின் பட்டு மிகவும் வலிமையானது மற்றும் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
* சிலந்திகள் பட்டு வலைகளை இரையைப் பிடிக்கவே உருவாக்குகின்றன.
* அனைத்து சிலந்திகளும் தங்கள் இரையை வலையில் பிடிப்பதில்லை. சில ஒளிந்து கொண்டு பூச்சிகள் வரும் வரை காத்திருக்கின்றன.
* சிலந்திகள் முட்டைகளை இடுகின்றன, அவற்றைப் பாதுகாப்பாக முட்டைப் பைகளில் சேமித்து வைக்கின்றன.