கடலைக் கடக்க வேண்டிய அவசியமோ அல்லது வேறு எந்த குறிப்பிடத்தக்க தடையோ இல்லாமல் நடந்து செல்லும் உலகின் மிக நீண்ட நடைபாதை கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா) முதல் மகடன் (ரஷ்யா) வரை ஆகும். இவ்விரு இடங்களுக்கும் செல்ல விமானங்கள், படகுகள் தேவையில்லை, இடையில் பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மொத்த தூரம் 21,808 கிலோ மீட்டர் மற்றும் சராசரியாக 4,310 மணி நேரம் நடக்க வேண்டும். 187 நாட்கள் இடைவிடாமல் நடப்பது அல்லது 561 நாட்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் நடப்பது என்று பயணித்தால், வழியில், நீங்கள் 17 நாடுகள், ஆறு நேர மண்டலங்கள் மற்றும் அனைத்து பருவங்களையும் கடந்து செல்ல முடியும்.