நமக்குக் கிடைத்திருக்கும் நண்பர்களை மூன்று வகையாகப் பிரித்து விடலாம். பனை மரம், தென்னைமரம், பாக்குமரம். எப்படி?
பனை மரம் - தானாக முளைத்து, தானாகத் தண்ணீர் குடித்து, தானாக வளரும். அது போல் நமக்கு வலிய வந்து உதவி செய்பவர்கள் சிலர்.
தென்னை மரம் - எப்பொழுதாவது தண்ணீர் விட்டால் போதும். வளர்ந்துவிடும். அதுபோல் எப்போதாவது உதவி செய்தால் அதை நினைவில் வைத்து நமக்கு அடிக்கடி உதவுபவர் சிலர்.
பாக்கு மரம் - தினமும் தண்ணீர் விட்டால்தான் வளரும். அதுபோல் தினமும் உதவி செய்தால்தான் நம்மை சிலர் கவனிப்பார்கள்.
உங்களுக்குக் கிடைத்த நண்பர்கள் எந்த வகை? நீங்கள் எந்த வகை? என்று சொல்லுங்கள்...!