வாழ்க்கை என்பதின் முதல் எழுத்து ‘வா’. உலகிற்கு வா! வந்து என்ன செய்வது? அதன் முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் நம்மைப் பார்த்து ‘வாழ்’ என்று கூறுகிறது.
‘வாழ்ந்தால் எனக்கு என்ன கிடைக்கும்’ என்று கேட்டால், அதன் முதலெழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்து, ‘வாகை’ கிடைக்கும் என்று சொல்கிறது.
வாகை எனும் வெற்றி, எப்படிக் கிடைக்கும்?
வாக்கு, அதாவது சொற்சுத்தம் உடையவராக இருந்தால் வாகை கிடைக்கும்.
வாக்கு மட்டும் சுத்தமாக இருந்தால் போதுமா?
இறுதி எழுத்து ‘கை’ உழைப்பை வலியுறுத்துகிறது. இப்படி வாழ்வில் வாகை சூட உழைப்பு அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.