காதுக்கு முதல் நகை ஏன்?
கண்கள் நம்மை நரகத்திற்கு அனுப்புகிறது. காதுதான் பஞ்சாட்சரம் உபதேசம் கேட்டு சிவகதிக்கு வழி அனுப்புவது. கவனமாகக் கேளுங்கள். கண்ணை விடக் காது உயர்ந்தது. நான் சிந்தித்துச் சொல்கிறவன். கண்ணில்லாதவன் வித்வானாயிருப்பார்கள். செவிடன் வித்வானாயிருக்க முடியாது.
துவாரம் வேங்கிடசாமி நாயுடு, அந்தகக்கவி வீரராகவ முதலியார், மாம்பழக்கவிச் சிங்க நாவலர் ஆகியோர் கண் பார்வையில்லாதவர்கள். செவிடாயிருப்பவர்கள் வித்வானாயிருந்தது கிடையாது. கண்ணினால் கெட்டவர் பலர். இராவணன் கண்ணினாலே கெட்டான்.
இந்த வாழ்க்கைக்கு இன்றியமையாதது காது. அதனால்தான் காதுக்கு முதல் நகை போடுகிறோம். கர்ணபூஷணம்.
இதனால்தான் ஞானசம்பந்தர், “தோடுடைய செவியன்” என்று செவியைச் சிறப்பிக்கிறார். திருவள்ளுவர் “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்” என்கிறார்.
நன்றி:திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல்
தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.