வெற்றி...யாருக்கு?
ஒரு நாய்க்கும், பூனைக்கும் ஓட்டப்பந்தயம் நடத்தப்பெற்றது. அந்தப் போட்டியில், அவையிரண்டும் கொடுக்க பட்ட தூரம் ஓடிய பின் ஆரம்பித்த இடத்துக்கேத் திரும்பி வர வேண்டும்.
நாய் ஒரு குதிப்பில் 3 அடியும் , பூனை 2 அடியும் குதிக்கிறது. ஆனால், நாய் இரண்டு முறை குதிக்கும் நேரத்தில் பூனை மூன்று முறை குதித்து விடுகிறது.
எங்கே இந்தப் புதிர்க்கணக்கைக் கணக்கிட்டுப் பாருங்கள். என்ன பார்த்து விட்டீர்களா...?
இப்போது சொல்லுங்கள்....
இப்போட்டியில் வெல்லப் போவது நாயா , பூனையா? என்று சரியாகச் சொல்லி விடுங்கள் பார்ப்போம்...!
சரி சரி... விடுங்கள்... விடையை நானேச் சொல்லி விடுகிறேன்.
பூனையே வெற்றி பெறும்... கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.