1949 ஆம் ஆண்டில் இந்தியக் கணிதவியலாளர் டி.ஆர். கார்ப்ரேகர் (D.R.Kaprekar) என்பவர் கண்டறிந்த எண் 6174 ஐ "கார்ப்ரேகர் எண்" என்று அழைக்கின்றனர்.
தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக: 5, 7, 8, 6
அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள்.
8765
பின்னர் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.
5678
பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.
8765 - 5678 = 3087
வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள். இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை 6174 என்ற எண் வரும்.
மேற்காணும் நமது விடையிலுள்ள நான்கு இலக்கங்களை (3087) உபயோகித்து வரும் பெரிய எண் : 8730, சிறிய எண் : 0378
பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.
8730 - 0378 = 8352
இந்த நான்கு இலக்கங்களை (8352) உபயோகித்து வரும் பெரிய எண் : 8532, சிறிய எண் : 2358
பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.
8532 - 2358 = 6174
எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு நிலையில் 6174 என்ற எண் வரும். இந்த எண்ணை கார்ப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.
நீங்களும் ஏதாவது நான்கு எண்களை எடுத்துக் கொண்டு செய்து பாருங்கள்...