நீங்கள் நினைத்துக் கொண்ட மூன்று இலக்க எண் எதுவாக இருப்பினும், அதனை எளிதில் கண்டுபிடிக்கலாம். எப்படி? என்றுதானே கேட்கிறீர்கள்... வாங்க தெரிஞ்சுக்கலாம்...!
ஒரு மூன்று இலக்க எண்ணை எழுதிக் கொள்ளுங்கள்.
இங்கு உதாரணமாக, 213 ஐ எடுத்துக் கொள்வோம்.
அந்த எண்ணைத் தொடர்ந்து, அதே எண்ணை மீண்டும் எழுதி ஆறு இலக்க எண்ணாக ஆக்குங்கள்.
213213
அதை ஏழு எனும் எண்ணால் வகுக்கவும்
213213 / 7 = 30459
வந்த விடையினைப் பதினொன்று எனும் எண்ணால் வகுக்கவும்.
30459 / 11 = 2769
கிடைத்த எண்ணைப் பதின்மூன்றால் வகுக்கவும்
2769 / 13 = 213
நாம் நினைத்த எந்தவொரு மூன்று இலக்க எண்ணையும் இப்படிக் கண்டறிந்து விடலாம்.