ஏதாவதொரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். (20 என்று வைத்துக் கொள்ளலாம்)
அந்த எண்ணுடன் எண் 5 ஐக் கூட்டுங்கள். (20+5 = 25)
கூட்டி வந்த எண்ணை 3 ஆல் பெருக்குங்கள். (25x3=75)
பெருக்கி வந்த எண்ணிலிருந்து 15 ஐக் கழியுங்கள் (75-15=60)
வந்த எண்ணை நீங்கள் நினைத்த எண்ணைக் கொண்டு வகுத்துக் கொள்ளுங்கள் (60/20=3)
வகுத்துக் கிடைத்த எண்ணுடன் எண் 7 ஐக் கூட்டுங்கள் (3+7=10)
விடை 10 என்று இருக்கும்.
குறிப்பு:
நீங்கள் எந்தவொரு எண்ணை எடுத்துக் கொண்டும், மேற்கண்ட வழிமுறைகளைச் செயல்படுத்தினால், உங்களின் விடை 10 என்ற எண்ணாகவே இருக்கும்.