ஒரு சரக்கு ரயில் 72 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. ரயில் 250 மீ நீளமுள்ள நடைமேடையை 26 வினாடிகளில் கடக்கிறது என்றால் சரக்கு ரயிலின் நீளம் என்ன?
ரயிலின் வேகம் = 72 கிமீ/மணி
நடைமேடையில் நீளம் = 250 மீ
நடைமேடையை ரயில் கடக்க ஆகும் நேரம் = 26 வினாடிகள்
இந்தத் தகவல்களைப் பார்த்ததும் ஒரு கண்ணில் பட்டிருக்கும். நடைமேடை நீளம், கடக்கும் நேரம் மீட்டர், மற்றும் வினாடிகள் கணக்கில் இருக்கின்றன. ரயிலின் வேகம் மட்டும் கிமீ. மணி என்ற அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதை மீ/நொடிக்கு மாற்ற வேண்டும்.
கிமீ/மணி என்ற அளவை மீ/வி க்கு மாற்ற வேண்டும். அதற்குக் கிடைத்த ஒப்பீட்டு வேகத்தை 5/18 ஆல் பெருக்க வேண்டும்.
ரயிலின் வேகம் = 72 *5 /18 = 20 மீ/வினாடி
மொத்தமாகக் கடக்கும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுல நடைமேடையில் நீளம் நமக்கு தெரியும் ரயிலின் நீளம் தெரியாது. தெரியாததை x என்று வைத்துக் கொள்வோம். இப்பொது வேகத்தின் சூத்திரத்தில் உள்ளிடுவோம்
20 மீ/வினாடி = 250 + மீட்டர் / x 26 வினாடிகள்
20 x 26 = 250 + x
250 + x = 520
x = 520 - 250
x = 270
எனவே சரக்கு ரயிலின் நீளம் என்பது 270 மீட்டர்கள் என்று கண்டுபிடித்து விடலாம்.