1089 அதிசயம்
மூன்று இலக்க எண் ஏதாவது ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே திருப்பி எழுதிக் கழித்து விடை காணுங்கள். அந்த விடையுடன் விடையைத் திருப்பி எழுதிக் கூட்டுங்கள் உங்களுக்கான விடை 1089 என்று வரும்.
உதாரணமாக
இங்கு 581 எடுத்துக் கொள்வோம்.
581 ஐத் திருப்பி எழுதுங்கள் = 185
581 லிருந்து திருப்பி எழுதிய எண் 185 ஐக் கழிக்கவும்.
581 - 185 = 396
கழித்து வந்த விடையைத் திருப்பி எழுதுங்கள் = 693
இவ்விரண்டையும் சேர்த்துக் கூட்டுங்கள் விடை = 1089
396 + 693 = 1089
* இங்கு எடுக்கப்படும் மூன்று இலக்க எண்ணின் முதல் எண்ணும் கடைசி எண்ணும் சமமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.