ஒரு நாளைக்கு எத்தனை தத்பரைகள் என்று தெரியுமா?
1 நாள் - 60 நாழிகை அல்லது கெடிகைகள்.
1 கெடிகை - 60 விக் கெடிகைகள்.
1 விக்கெடிகை - 60 லிப்தங்கள்.
1 லிப்தம் - 60 விலிப்தங்கள்.
1 விலிப்தம் - 60 பரைகள்.
1 பரை - 60 தத்பரைகள்.
ஆக ஒரு நாளைக்கு 46,656, 000 தத்பரைகள் என்கிறது அந்தக் கணக்கு.
என்னமோ ஒன்றுமே புரியவில்லை என்கிறீர்களா? அது இருக்கட்டு...!
சூரியனின் கதிர் ஒரு அணுவைக் கடக்கும் காலம் பண்டைய காலத்திலேயே “சித்தாந்த சிரோன்மணி” என்ற சாத்திரத்தில் கணக்கிடப்பட்டு குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
பரமாணு என்பது ஒரு அங்குலத்தில் 1/349525 பங்கிலிருந்து 1/1000000 பங்காகும்.
அணு தூரம் என்பது 17,496,000,000 பரமாணு தூரமாகும்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.