பிப்ரவரி
மாதங்கள் மொத்தம் பன்னிரெண்டு
இருக்குது நீண்ட நாட்கொண்டு
இரண்டாவது மாதம் பிப்ரவரி
சொல்கிறேன் அதை புரியும்படி
சாதாரண ஆண்டு என்பதையும்
லீப் ஆண்டா என்பதையும்
காட்டுவது மாதம் பிப்ரவரி
கற்கண்டு கணக்கு இனிக்கும்படி
மொத்த நாட்கள் இருபத்தெட்டு
முடிந்துவிட்டால் சாதாண்டு
இருபத்தொன்பது வந்துவிட்டால்
தம்பி அது லீப் ஆண்டு
ஆங்கில மாதத்தின் சின்னப்பிள்ளை
நான்காண்டுகளுக்கு மாறும்பிள்ளை
நாட்களோ இதற்கு அதிகமில்லை
முப்பது முப்பத்தொன்று இதிலில்லை.
இருப்பத்தொன்பதில் பிறந்துவிட்டால்
வருடந்தோறுமில்லை பிறந்தநாளாம்
மொரார்ஜீ தேசாய் பிறந்த நாளோ
நான்காண்டுகளுக்கொரு முறை அறியுங்கள்!
- அண்டனூர் சுரா
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.