கல்விக்காய்!
கல்விக் காயது கசப்பாகும்
காலம் கழியக் கனியாகும்
கல்வி என்பது தேன்கூடு
கட்டி எழுப்புதல் பெரும்பாடு
பள்ளியில் பாடம் கனதியாகும்
பருகையில் கொஞ்சம் உவர்ப்பாகும்
கல்விதான் நமது கண்ணாகும்
கல்லாதவன் கண் புண்ணாகும்.
கல்வி என்பது தொடர்ந்துவரும்
கல்லறை வரைக்கும் பயனாகும்
செல்வம் வேறில்லை இவ்வுலகில்
தேடுகல்வியைத் தேர்ந்து பயில்.
கற்றிடு கல்வியை வாழ்நாளில்
காலம் உன்னைப் பாராட்டும்
பெற்றவர் சுற்றம் மகிழ்ந்தாட
போற்றும் வகையில் வாழ்வோமே.
- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.