பருந்தாரே...! பருந்தாரே...!!
அகல விரித்த சிறகோடு
அழகாய்ப பறக்கும் பருந்தாரே
சுகமாய் வானில் வட்டமிடும்
செய்தி என்ன சொல்வீரா?
கோழிக் குஞ்சைக் கண்டீரா?
கீச்சிடும் ஒலியை ரசித்தீரா?
கோலச் சொண்டுள் உமிழ்நீரா?
கொத்திச் சுவைக்க நினைத்தீரா?
பாவம் சின்னக் குஞ்சுகளாம்
பறக்க முடியாப் பஞ்சுகளாம்
சேவல் காவல் செய்கிறதாம்
சின்னக் குஞ்சுகள் நடுங்கிறதாம்
தூக்கிடும் ஆசை கொள்ளாதீர்
துடிக்கும் குஞ்சுகள் கொல்லாதீர்
தாக்கியே உயிர்களை அழிப்பதெல்லாம்
தப்பாம் உமக்குத் தெரியாதோ?
முற்றம் நிறைந்த மரமுண்டு...
முற்றிப் பழுத்த கனிகளுண்டு...
உற்றுக் கொத்தி உண்ணலாம் வா!
உறவு கொண்டு மகிழலாம் வா!!
- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.