வெண்பனி ஓவியம் வரைகிறதோ?
தொட்டி நிறைந்து ரோஜாச்செடி
தொடராய் பூவும் பூக்கிறது
பட்டுப் போன்ற மென்னிதழால்
பவளம் போலே ஜொலிக்கிறதே
மொட்டுக்கள் சூழ வண்டுளதாம்
மலரும் நாளைப் பார்த்திருக்காம்
தொட்டுத் தொட்டு மகிழ்கிறதாம்
தூய மணத்தில் மனம்களிக்கிறதாம்
இத்தனை நிறத்தில் பூக்கிறதே
இன்பம் அள்ளிச் சேர்க்கிறதே
மெத்தென அமரும் பஞ்சணையோ
மென்பனி ஓவியம் வரைகிறதோ
பூவைக் காக்கும் முள்போலே
புவியில் பூவைக் காத்திடுவோம்
பூவின் நறுமணம் நாமாகி
பூ மனத்தால் புவி நிரப்பிடுவோம்.
- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.