சிட்டாய்ப் பறந்து வா!
சில்லென அடிக்கும் காற்று
மெல்ல மேனியை வருடிடவே
இரைந்து ஓங்கும் அலைகளைக்
கரையில் நின்று ரசித்திடவே...
கட்டம் கட்டமாய் நூலை விட
பட்டம் உயர உயரப் பறந்திடவே
தோட்டம் தோட்டமாய்ப் பறக்கும்
பட்டங்களை பார்த்து ரசித்திடவே...
விண்ணில் ஒளிரும் வட்ட நிலவை
வண்ண முகில்கள் மறைத்திடவே
தாரகைகள் மின்னும் அழகினை
தரையில் நின்று ரசித்திடவே...
மணல் வீடு கட்டி நாமும்
மன மகிழ்ந்து விளையாடிடவே
சிட்டாய்ப் பறந்து வந்திடுவாய்
கடற்கரைக்குச் சென்றிடவே...!!
- பாஸித் மருதான்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.