அன்னை தெரேசா!
உலகம் வாழ்வது அன்பாலே
இதை உணரலாம் சிலரின் செயலாலே
யுகோஸ்லோவியா நாட்டில் பிறந்தது
சேவை சேவையென்றே ஒரு குழந்தை.
செல்வக் குடும்பத்தில் பிறந்தாலும்
ஏழைக்காய் மனம் கலங்கினார்
இந்திய தேசம் தேர்ந்தெடுத்து
பணியைத் தொடங்கினார் அன்னையுமே.
நோயுற்றவர்க்கே மருத்துவமென
கொல்கத்தா நகரில் தொடங்கினார்
யாரும் தீண்டத் தயங்கிய
தொழுநோய்க்கான சேவையினை.
அன்னை செல்வரிடம் கேட்டார் நிதியுதவி
அவரோ துப்பினார் எச்சிலையே
எச்சில் எனக்கு, உதவி எங்கே?
கேள்வியால் கல்லுள்ளம் மாறியது.
அன்னையின் சேவைக்குக் கிடைத்தது
பத்மவிருதோடு மாகஸேஸேவும்
அமைதியின் நோபல் பரிசு பெற்று
'பாரத ரத்னா'வாய் வலம் வந்தார்.
கன்னியாய் வாழ்ந்த அன்னையவர்
சேவையால் மக்கள் மனம் நிறைந்தார்
மனிதனும் தெய்வமாகலாமென
புனிதராய் மாறி நிருபித்தவர்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.