மரம் வளர்க்கணும்!
மரம் வளர்கணும் மரம் வளர்க்கணும்
சின்னத்தம்பி
மகிழ்ச்சியோடு மரம் வளர்க்கணும்
சின்னப்பாப்பா
ஆளுக்கொரு மரம் வளர்க்கணும்
சின்னத்தம்பி
அத வீட்டைச்சுற்றி வளர்க்கவேணும்
சின்னப்பாப்பா
மரம் வளர்ந்தா ஆடு கடிக்கும்
சின்னத்தம்பி
அதை வேலிகட்டி காக்கவேணும்
சின்னப்பாப்பா
காலை தோறும் தண்ணீர் ஊற்றனும்
சின்னத்தம்பி
ஆண்டு தோறும் உரம் வைக்கணும்
சின்னப்பாப்பா
மரம் வளர்ந்தால் மழை தருமே
சின்னத்தம்பி
தூய காற்றும் சேர்த்துத் தருமே
சின்னப்பாப்பா
மரம் வளர்க்கணும் மரம் வளர்க்கணும்
சின்னத்தம்பி
மகிழ்ச்சியோடு மரம் வளர்க்கணும்
சின்னப்பாப்பா.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.