மரம் வளர்ப்போம்!
பள்ளி செல்லும் தம்பியே !
பசுமை எங்கும் நிறைந்திட
வீட்டில் வீதியில் பள்ளியில்
விரும்பி மரம் நடுவாய் !
சுற்றுச் சூழல் சிறந்திடுமே !
சோம்பல் எல்லாம் பறந்திடுமே !
மண்ணின் மைந்தன் மரங்களினால்
விண்ணின் மழைத்துளி கிடைத்திடுமே !
புவியின் வெப்பம் குறைந்திடுமே !
குளங்கள் எல்லாம் நிறைந்திடுமே !
தூய காற்று கிடைத்திடுமே !
இயற்கை இன்பம் பெற்றிடுமே !
பிறந்த நாளில் நட்டிடலாம்
அரசு விழாக்களில் வைத்திடலாம்
நினைவுப் பரிசாய்த் தந்திடலாம்
நீங்கா இன்பம் பெற்றிடலாம் !
- மு. மகேந்திர பாபு, மதுரை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.