தம்பிக்கு அறிவுரை!!
பொய்யும் புரட்டும் இங்கே
பரவிக் கிடக்குது தம்பி - அதை
பகுத்தறிவுச் சிந்தனையால் நீ
களைந்திட வேண்டும் தம்பி!
புரட்டன்கள் கூறும் பேச்சை நீ
புறம் தள்ளுதல் வேண்டும் தம்பி!
புத்தகம் பல புரட்டிப் பல புதிய
உண்மைகளை அறிந்திட வேண்டும் தம்பி!
புதிய சிந்தனைகளைச் செய்திட நீ
பல நாட்டு நூற்களை, கலைகளைக்
கற்றிட வேண்டும் தம்பி!
புதுமை வேண்டும் என்றால் தெளிவினை
அறிதல் வேண்டும் தம்பி!
உன் பண்பை மாண்பை காக்கும்
புதுமையை ஏற்றிட வேண்டும் தம்பி!
புதுப்புது நூல்களை இயற்றிப்
புதிய உலகம் செய்திட நீ
விழைதல் வேண்டும் தம்பி!
மடமை போற்றும் பழமைதனை
முற்றும் அழித்திட நீ
விழைதல் வேண்டும் தம்பி!
-இல. பிரகாசம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.