நூறாண்டு வாழ்ந்திடுவோம்!
காடுபோல் வளர்ந்த மரம்
பசுமையாய் இருந்த மரம்
பறவைகள் அடைந்த மரம்
பல நன்மைகள் செய்த மரம்
சுத்தக் காற்று தந்த மரம்
நித்தம் பார்த்து மகிழ்ந்த மரம்
காய் கனிகளைத் தந்த மரம்
காக்கும் கடவுளாய் இருந்த மரம்
உயிராய் மதித்த மரம்
உருக்குலைந்து போனதென்ன?
இலையோடு இருந்த மரம்
மொட்டையாய் ஆனதென்ன?
நஞ்சான அசுத்த நீரை
வேராலே குடித்த மரம்
வெந்து கருகலாச்சே
மனிதா உன் நிலை என்ன?
மண்ணும் நீரும் கெட்டுப் போனால்
மனிதா நீ வாழ்வதெங்கே
மண்ணின் வளம் காத்திடவே
நீர் மாசைத் நடுத்திடுவோம்
கழிவு நீர் மேலாண்மை
காலமெல்லாம் செய்திடுவோம்
நோய் நொடிகள் தாக்காமல்
நூறாண்டு வாழ்ந்திடுவோம்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.