கோடைக்காலம்!
கோடைக்காலமாம் கோடைக் காலம்
நீண்ட விடுமுறை தரும் கோடைக்காலம்
ஆண்டு முழுவதும் படித்ததற்கு
ஆறுதல் தரும் கோடைக் காலம்
வெயில் காலமது பெரியவர்க்கு
வேண்டும் காலமது எங்களுக்கு
காடு மேடாய்ச் சுற்றினாலும்
களைப்பு எங்களுக்குத் தெரிவதில்லை
ஆண்டுக்கொரு முறை கிராமத்தை
ஆர்வமாய்ச் சென்று பார்த்திடுவோம்
உறவினரோடு உறவாடி நாங்கள்
உள்ளம் மகிழும் கோடைக்காலம்
ஆத்துல குளத்துல குளிச்சிடுவோம்
செடியில மரத்துல ஏறிடுவோம்
ஒத்த வயதுப் பிள்ளைகளுடன்
ஓடியாடி விளையாடிடுவோம்
பள்ளிக்கூடம் போக வேண்டியதில்லை
பாடங்கள் படிக்க வேண்டியதில்லை
கோடைக்காலமாம் கோடைக்காலம்
கொண்டாடி மகிழும் நல்லக் காலம்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.