வேப்பமரம்
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
வளர்ந்த நிற்குது வேப்பமரம்
சின்னச் செடியாய் நட்டு வைத்தேன்
எட்டாமல் வளர்ந்து நிற்குது இன்று.
வருடம் முழுவதும் குளிர்ந்த காற்றை
விலையில்லாமல் தருகின்றதே
இலை பூ காய் பழம் பட்டையென
அனைத்தும் மருந்தாய் மாறுகிறதே.
காயாய் இருந்தால் கசப்பாயும்
பழமாய் மாறியதும் இனிப்பாயும்
வீழ்ந்தாலும் விதையாய் பலன் தருதே
நாமும் வளர வளர நல்லவர்களாய் வாழ்வோம்.
கோடையில் இலையை உதிர்த்து
புதிதாய் துளிர்த்து வளர்கிறது
நம்மைத் தாக்கும் சுமைகளையும்
உதிர்த்தே வாழ்வோம் சுகமாக.
வறட்சி மழை எதையும் தாங்கும்
நம் மண்ணின் மரம் வேம்பு போலே
லாபம் நட்டம் எதையும் தாங்கி
வாழ்ந்து காட்டுவோம் பூமியிலே...
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.