இன்பம் இன்பமே!

காணும் காட்சியி எல்லாம் இன்பமே -கண்கள்
காணும் காட்சியில் எல்லாம் இன்பமே!
எத்தனைக் காட்சிக ளுண்டோ கண்களுக்கு
அத்தனை காட்சிகளும் இன்பம் இன்பமே!
கூடும் பறவையின் பாட்டொலி கேட்டிடின்
கூத்தாடும் உள்ளம் இன்பம் இன்பமே!
(காணும் காட்சியில் எல்லாம்)
காலையில் மலர்ந்திடும் மலரில் மொய்க்கும்
தேனீயின் கீதம் இன்பம் இன்பமே!
மாலையில் மலர்ந்திடும் மலரில் ஒலித்திடும்
ரீங்கார வண்டிசையும் இன்பம் இன்பமே!
(காணும் காட்சியில் எல்லாம்)
காலையில் உதித்திடும் ஆதவன் இன்பமே
மாலையில் தோன்றிடும் சந்திரனும் இன்பமே
கோலமயில் ஆடிட மேகம் பொழிந்தாலோ
கூத்தாடும் உள்ளம் இன்பம் இன்பமே!
(காணும் காட்சியில் எல்லாம்)
புல்லின் மீதுபடர்ந் திருக்கும் பனித்துளி
மெல்ல மின்ன இன்பம் இன்பமே!
கல்லின் உருவில் பேசும் சிற்பம்
கலையின் மோகம் இன்பம் இன்பமே!
(காணும் காட்சியில் எல்லாம்)
வானம் காற்று மழைத்துளி இன்பம்
சூரியன் சுடரொளி வீச இன்பம்
பூமியில் உயிர்த்த உயிர்கள் அனைத்தும்
பேசும் மொழிகள் யாவும் இன்பமே!
(காணும் காட்சியில் எல்லாம்)
இன்பம் இன்பமே! இப்புவியில் தோன்றிய
இன்னுயிர் யாவும் இன்பம் இன்பமே!
இன்பம் இன்பம் என்று களித்திட
துன்பம் மறந்தா லின்பம் இன்பமே!
காணும் காட்சியி எல்லாம் இன்பமே -கண்கள்
காணும் காட்சியில் எல்லாம் இன்பமே!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.