விடுக(வி)தை…
அயலக அரண்மனை அல்ல
அரசு இருப்பிடம் அதுவன்று
பிரிச்ச கூரை வீட்டில் இருக்கும்
ஓட்டுவீட்டினுள்ளே வெள்ளை மாளிகை
எதுவென்று யோசித்தீரோ மாணாக்கரே!
இயற்கை கொடுத்த வித்தாகும்
மண்மணக்கும் சமையலுக்கே பால்
மணமான உணவுச்சத்து வெள்ளை மாளிகை
இனிக்கும் குளம் நிறைந்துள்ள
‘தேங்காய்’ சரியான பதில்தானே ஐயா!
ஆம்! சரியாக யோசித்தீர்
சிறப்பாக யோசித்தீர்
ஓங்கி உயர்ந்த மரம்
இளநீர் கொண்ட மரம்
இயற்கையின் சத்து கொடை
வழிபடவும் வைக்கும் படை
தேங்காய் என்பதே விடை!
- கவிமலர்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.