பேரறிவு பெருக
புத்தகங்கள் வாசி... தம்பி
புத்தகங்கள் வாசி!
புத்துணர்வை யூட்டுகின்ற
புத்தகங்கள் வாசி!
நித்தமொரு புத்தகத்தை
நேரத்தோடு வாசி!
புத்தறிவுக் கருத்துகளைப்
புரிந்துகொள்ள வாசி!
நல்லநல்ல புத்தகங்கள்
நமதுநண்ப ராகுமே...! தன்
நம்பிக்கை பெற்றுமகிழ
நாள்தோறும் வாசி!
வெல்வதற்கு வழிகாட்டும்
விதவிதமாய்ப் புத்தகம்... நாம்
விரும்புகின்ற வாழ்க்கைதரும்
விவேகமான புத்தகம்!
கற்றுக்கொள்ள கடலளவு... நம்
கண்முன்அளிக்கும் புத்தகம்,
காலம்முழுதும் கற்றுத்தரும்
கையளவுப் புத்தகம்!
பெற்றுக்கொள்ள மனமிருந்தால்
பெரிய பரிசு, புத்தகம்... நம்
பேரறிவை விரிவாக்கும்
பெருங்கருத்துப் பெட்டகம்!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.