கப்பல் பார்த்தேனே...!
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேனே
கடலில் கப்பலைப் பார்த்தேனே...
மிதக்கும் அடுக்குமாடி மாளிகையாய்
கடலில் கப்பலைப் பார்த்தேனே...
ஒவ்வொரு கப்பலும் ஒருவிதமாய்
கடலில் மிதந்தது ஆங்காங்கே
பயணிகள் கப்பல் சரக்கு கப்பல்
மீன்பிடிக் கப்பல் போர்க் கப்பல்.
இதையும் தவிர்த்து இன்னொரு கப்பல்
இருக்குதென்று அப்பா சொன்னார்
என்ன கப்பல் அதுவென்றேன்
மூழ்கித் தாக்கும் நீர்மூழ்கிக் கப்பலென்றார்.
பயணிகள் கப்பல் கடல் பயணத்துக்கு உதவும்
சரக்குக் கப்பல் வணிகம் செழிக்கச் செய்யும்
மீன்பிடிக் கப்பல் கடலுணவு கொண்டு வரும்
போர்க் கப்பல் நாட்டைப் பாதுகாக்கும்
இன்று நான் பார்வையாளனாய்
நாளை நானும் மாலுமியாய்
நிச்சயம் உலகைச் சுற்றி வருவேன்...
இந்தியன் என்ற பெருமையோடு...
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.