ஊர் போற்ற வாழ்ந்திடுவோம்
மே மாதம் முடிஞ்சிருச்சி
தன்னானே தானே...
ஜூனும் தான் பொறந்துருச்சி
தன்னானே தானே...
புது வகுப்பு போகப் போறோம்
தன்னானே தானே...
புது உலகம் படைக்கப் போறோம்
தன்னானே தானே...
புத்தம் புது புத்தகங்கள்
தன்னானே தானே...
அதனை ஆசையாக படித்திடுவோம்
தன்னானே தானே...
வித்தியாசமாய் பாடம் நடத்தும்
தன்னானே தானே...
எங்க ஆசான் இருக்க பயப்பட மாட்டோம்
தன்னானே தானே...
வகுப்பறை பாடத்தோடு நாங்க கற்போம்
தன்னானே தானே...
காலையில தமிழ் ஆங்கில எழுத்து
தன்னானே தானே...
மதியத்துல வாய்பாடு சொல்வோம்
தன்னானே தானே...
மாலையில விளையாடி மகிழ்வோம்
தன்னானே தானே...
ஆசிரியர் பாடம் நடத்த கவனிப்போம்
தன்னானே தானே...
வீட்டுப் பாடம் அனைத்தையும் முடித்திடுவோம்
தன்னானே தானே
நல்ல பிள்ளையென பெயரெடுத்து
தன்னானே தானே
ஊர் போற்ற வாழ்ந்திடுவோம்
தன்னானே தானே...
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.