அரசுப் பள்ளியில் படிக்கலாம்...!
வா... வா... ராசா பள்ளிக்கு வா
பாடம் நல்லா படிக்கலாம் வா
கொரோனா கொடுமை மறக்கலாம் வா
மகிழ்ந்தே படிக்கலாம் பள்ளிக்கு வா.
அருமையா இருக்கு அரசுப் பள்ளி
அனைத்து வசதியும் உள்ள பள்ளி
கட்டணம் இல்லா அசத்தும் பள்ளி
கட்டாயம் சேருங்கள் அரசுப் பள்ளியில்.
ஆடிப்பாடி கற்பிக்கும் பள்ளி
அனைத்தும் இலவசமாய் தரும் பள்ளி
புதுமையைப் புகுத்தும் புதுமைப் பள்ளி
விளையாட்டிற்கு முன்னுரிமை தரும் பள்ளி.
சுகாதாரம் சுத்தம் நிறைந்த பள்ளி
சத்துணவு வழங்கும் அரசுப் பள்ளி
தினமொரு முட்டையும் வழங்கும் பள்ளி
உணவோடு உடையும் வழங்கும் பள்ளி.
நவீன வகுப்பறை உள்ள பள்ளி
காணொலி வழியிலும் கற்பிக்கும் பள்ளி
நல்லாசிரியர்கள் உள்ள பள்ளி
நல் மாணவர்கள் உருவாகும் பள்ளி.
உள்ளூரில் உள்ள உங்கள் பள்ளி
நமக்கேச் சொந்தமான அரசுப்பள்ளி
அனைவரும் சேர்வோம் நம் பள்ளியில்
பெருமையடைவோம் அரசுப் பள்ளியாலே!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.