கல்வியும் கனவும்
கசடற கற்கவும் கற்றபடி நிற்கவும்
கல்வியே என்றும் கலங்கரை விளக்கம்!
வசப்படும் வானமும்; வாழ்வும் உயருமே!
சொல்லின் முடிவிலே சரணம் உலகுமே!
மாசிலா மேலோர் மாண்புடை நட்புக்கும்
வாசிக்கும் புத்தகம் வழியைக் காட்டும்!
பாசியாய்த் துர்குணம் படியும் நெஞ்சத்தை
ஆசிரியர் துடைத்திட அறமும் வளரும்!
கற்றலினால் பயனே! கலந்தாடும் உள்ளமே!
உற்றதானத் தோழமை உடனிருக்க வருமே!
எண்ணும் எழுத்தும் ஏத்தும் வாழ்முறை!
எண்ணமோ உயர்வாகும் எப்போதும் உயிர்வரை!
கண்ணில் தேக்கிடும் கனவைக் காணவே
மண்ணில் கிடைத்ததோர் மங்கா அறிவொளி!
படிப்பே பக்குவமும் பண்படவும் வைக்கும்!
துடிப்புடன் பயில்வோம்! தொடுவோம் பெருவெளி!
இலக்கமும் இயலும் இலக்காய்க் கொண்டே
கலையாதச் செல்வத்தைக் கையில் கொள்வோம்!
தயக்கமும் உடைத்தால் தடையது விலகும்!
மயக்கம் அகலுமே மனிதத்திற்குப் பெருமையே!
- கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி..
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.