புகைப்படத்தை எழுத்துக்களுடன் அமைக்கலாம்
உ. தாமரைச்செல்வி
உங்கள் படத்தையோ அல்லது உங்களுக்கு விருப்பமானவர் புகைப்படத்தையோ எழுத்துக்களைக் கொண்டு உருவாக்க வேண்டும் என்கிற ஆசையா?
உங்கள் ஆசையை நிறைவேற்ற ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்திற்குள் சென்று உங்கள் படத்தையோ அல்லது தாங்கள் விரும்பும் படத்தையோ உள்ளீடு செய்யுங்கள். அடுத்துள்ள காலிக் கட்டத்தில் தாங்கள் விரும்பும் எழுத்துக்களையோ அல்லது சொற்களையோ அல்லது எண்களையோ உள்ளீடு செய்யுங்கள். அடுத்து எழுத்துரு அளவைத் தேர்வு செய்யுங்கள். அடுத்து புகைப்படத்தின் அளவைக் குறிப்பிடுங்கள். அடுத்துள்ள நிறத்தில் சரியானதைத் தேர்வு செய்யுங்கள். பின்புற நிறத்தையும் குறிப்பிடுங்கள். அடுத்திருக்கும் தேர்வுகளையும் செய்து கொண்டு கீழுள்ள மாற்றிடு எனும் பொத்தானைச் சொடுக்குங்கள்.
சிறிது நேரத்தில் தாங்கள் விரும்பிய புகைப்படம் தாங்கள் விரும்பிய எழுத்துக்களுடன் மாறிவிடும். 
வித்தியாசமாக விரும்புபவர்களுக்காகவே.... வித்தியாசமான படமளிக்கும் தளம் இது...!
இணையதள முகவரி:

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.