உணவுப் பழக்க வழக்கத்திற்கான காலக்கோடு!
உ. தாமரைச்செல்வி
இன்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான உணவுப் பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த உணவுப் பழக்கம் எப்போஹு தொடங்கியிருக்கும் என்றுதானே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்...?
உணவுப் பழக்கத்தின் காலம், உணவுகள் போன்ற பட்டியலைக் கொண்ட கால அட்டவணையை ஒரு இணையதளம் அளிக்கிறது.
இந்த இணையதளத்தில் கிறித்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு 17,0000 ல் தொடங்கி கி. பி. 2010 ஆம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்கள் அளிக்கப்பட்டு ஒவ்வொரு காலத்திலும் தொடங்கிய உணவுப் பொருள்கள், அதற்கான உணவு வகைகள் போன்றவை குறித்த குறிப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருள் மற்றும் காலத்தில் சொடுக்கினால் அதுகுறித்த முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. 
உணவு குறித்த பல சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக...!
இணையதள முகவரி:

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.