Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

மியன்மாரும், ரோஹின்கியா முஸ்லீம்களும்

பு. டயசியா
சமூக விஞ்ஞானங்கள் துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.


இராணுவ ஆட்சியிலிருந்து மீண்டு ஜனநாயக ஆட்சியைக் கொண்டுள்ள மியன்மார் இன்று சர்வதேச அளவில் உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளது. மியன்மார் பௌத்த மக்களைப் பெரும்பான்மையாகவும், வேறு சில இனங்களை சிறுபான்மையாகவும் கொண்ட பல்கலாசார அரசாகும். எனினும் அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான ரோஹின்கியா முஸ்லீம்கள் மீது அரசு மேற்கொள்ளும் வன்முறைகள் மனிதத்துவமற்ற செயல்களை வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்வாறு மியன்மார் அரசு மற்றும் இராணுவம் வன்முறைகளைப் பிரயோகிக்கக் காரணம் என்ன? ரோஹின்கியா முஸ்லீம்கள் எனப்படுவோர் யார்?

தற்காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பட்டியலில் முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ள ரோஹின்கியா முஸ்லீம்கள் மியன்மாரின் புதிய குடிகள் அல்ல. 12ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வந்து குடியேறிய அரேபிய இனத்தவர்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் பங்க‍ளாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் காணப்பட்டாலும் மியன்மாரின் மேற்குக் கரையோரமான ராக்கைன் எனப்படும் மாநிலத்திலேயே அதிகளவில் வாழ்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு மேலான பிரித்தானிய ஆட்சிக் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்களை பெறுவதன் நிமித்தமாக இந்தியாவிலும், பங்களாதேஷிலிந்தும் மியன்மாருக்குப் புலம் பெயர்ந்து சென்றனர். ஏனெனில் பிரித்தானிய ஆட்சியின் போது மியன்மார் இந்தியாவின் ஓர் மாகாணமாகக் கணிக்கப்பட்டது. எனினும் மியன்மார் நாட்டுப் பெரும்பான்மையின மக்கள் அனைத்து ரோஹின்கியா இன முஸ்லீம்களையும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களே தவிர இவர்கள் நமது நாட்டுக்குரியவர்கள் அல்ல என நோக்குகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக 1948இல் சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், பிரித்தானிய ஆட்சியின் போது இடம்பெற்ற புலம் பெயர்வானது சட்ட விரோதமானது என்று மியன்மார் அரசாங்கம் கூறியது. அவர்கள் பேசும் மொழியும் பங்களாதேஷின் வங்காளி மொழியைப் போன்று இருப்பதால் மியன்மார் நாட்டு பௌத்தர்கள் ரோஹின்கியா முஸ்லீம்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற சார்பெண்ணத்தின் அடிப்படையில் பகிரங்கமாகப் புறக்கணிக்கின்றனர். அதிலிருந்தே ரோஹின்கியா முஸ்லீம்களுக்கெதிரான தாக்குதல்களும், வன்முறைகளும் ஆரம்பித்து விட்டன. இதற்குப் பௌத்த அடிப்படைவாதமும், அரசியல் காரணிகளும் பக்கபலமாக உள்ளன. 1962இல் இவர்களுக்கு வெளிநாட்டு அடையாள அட்டையே வழங்கப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு எதுவுமே வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள், அரசியல் பங்கு பற்றுதல்கள், அரசின் உதவிகள் போன்றவை மறுக்கப்படுவதோடு திருமணம், தலைமுறை உருவாக்கம் போன்றவையும் தடுக்கப்படுகின்றது. அதன் நிமித்தமாக இவ்வின மக்கள் 1970களிலிருந்தே மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குச் சென்று குடியேறினர்.1982இல் ரோஹின்கியா முஸ்லீம்களுக்கு எதிரான அநீதிகள் மேலும் தீவிரம் பெற்று மியன்மார் அரசாங்கம் அவர்களுக்கான குடியுரிமை அந்தஸ்தை வழங்க மறுத்து விட்டது. இன்று வரை நாட்டின் சட்ட விரோத இனம், புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்றே இவர்கள் கணிக்கப்படுகின்றனர். அத்தோடு மியன்மார் அரசு அங்கு வாழும் 135 இனங்களை அந்நாட்டின் பூர்வீக இனங்களாக அங்கீகரித்த போதிலும் ரோஹின்கியா முஸ்லீம்களை அந்நாட்டின் இனமாக அங்கீகரிக்கவில்லை. இத்தகைய ஒடுக்குமுறைகளின் உச்சகட்டம் 2012 - 2017 காலப்பகுதியிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகளை மறுத்தல், சிறுவர்களைக் கொலை செய்தல், பெண்களைப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்துதல், பாரபட்சப்படுத்தல், ஓரங்கட்டப்படுதல், அந்நியப்படுத்தப்படுதல் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை இராணுவமும், உள்ளக அரசும் இழைக்கின்றது.

அதுமட்டுமன்றி மியன்மார் அரசும், இராணுவமும் ரோஹின்கியா முஸ்லீம்கள் பிறந்து வளர்ந்த சொந்த நாட்டிலிருப்பதற்குரிய உரிமைகளை வழங்காது அம்மக்களை நலிவுநிலைக்கு உட்படுத்தியுள்ளதோடு, இனப்படுகொலைகளையும் மேற்கொள்கின்றது. இதனால் உலகில் அதிக துன்புறுத்தல்களுக்கும், வன்முறைகளுக்கும் உட்படுகின்ற மக்கள் ரோஹின்கியா முஸ்லீம்கள் என ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டளவில் மியன்மார் “இனச் சுத்திகரிப்பு” என்ற தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபை பகிரங்கமாக அறிவித்தது.

இவ்வாறான வன்முறைகளிலிருந்து அம்மக்கள் விலகி வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வெளியேறுவதும் குற்றமாகக் கருதப்படுகின்றது. எனினும் அத்தகைய அச்சுறுத்தல்களின் மத்தியில் வன்முறைகளின் தீவிரம் அதிகரித்ததன் காரணமாகக் கடல் வழியாக உயிருக்கு உத்தரவாதமற்ற வகையில் பாதுகாப்பற்ற பயணங்களை அண்டை நாடுகளுக்கு மேற்கொள்கின்றனர். அவ்வாறு ஆபத்தான கடல் வழிப் பயணங்களைக் கடந்து செல்லும் போது பல மக்கள் இறக்கின்றனர். தப்பிப் பிழைத்தவர்களை வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுக் கொண்டாலும், அவர்களை உரிய அடிப்படை வசதிகள் அற்ற முகாம்களிலேயே தங்க வைத்துள்ளன.

அண்மை நாடான வங்கதேசம் சில காலத்திற்கு முன்பிருந்து அவர்களை ஏற்றுக் கொண்டாலும் அவர்களுக்கான குடியுரிமையை வழங்க மறுக்கின்றது. இதனால் இரண்டு நாடுகளிலும் குடியுரிமையற்ற நிர்க்கதியான மனிதர்களாக ரோஹின்கியா முஸ்லீம்கள் காணப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் தெரிவிக்கின்றது. புலம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தகவலின் படி 2016 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் தொடக்கம் 2017 ஆடி மாதம் வரையான காலப்பகுதியினுள் 87,000 ரோஹின்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.வங்கதேசம் அபிவிருத்திடைந்து வரும் நாடாகும். புலம் பெயர்ந்துள்ள இத்தனை ஆயிரம் அகதிகளுக்குமுரிய அடிப்படை வசதிகளைச் சரியான வகையில் வழங்குவது சிரமமாகும். எனினும் மனிதாபிமான முறையில் வங்கதேச அரசு ரோஹின்கியா அகதிகளை ஒரு ஒதுக்கப்பட்ட தீவில் குடியேற்றியுள்ளது. பருவக்காற்றின் போது அத்தீவு வெள்ளப்பெருக்கினால் சூழப்படுவதால் மக்கள் பல இன்னல்களுக்கும், சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கின்றனர். அண்மையில் வங்கதேசத்திற்குள் 800,000 அதிகமான ரோஹின்கியா முஸ்லீம்கள் தஞ்சமடைந்ததன் காரணமாக உலகின் மிகப்பெரிய அகதி முகாமை அமைக்கப் போவதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. ஜனநாயக ஆட்சியின் கீழ் சமாதானம், ஐக்கியம் போன்றவற்றை பேண வேண்டிய மியன்மார், சிறுபான்மை மக்கள் இனத்திற்கு எதிராக பாரிய தாக்குதல்களை மேற்கொள்வது கண்டனத்திற்குரியதாகும். அத்தோடு 2006 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற ஆங் சாங் சூகியின் மௌனம் கூட பலர் மத்தியில் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது. இராணுவ நடவடிக்கைகளை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்பதும், நாட்டின் குடியுரிமை அற்ற வந்தேறு குடிகள் இத்தகைய ரோஹின்கியா முஸ்லீம்கள் என்பதும் ஆங் சாங் சூகியின் மௌனத்திற்கான காரணங்களாக சுட்டிக் காட்டப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் இவை அனைத்துமே அப்பாவிக் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், ஆண்களின் அழிவுகளுக்கு வித்திடுகின்றன. இதனால் வாழ்க்கையில் நிலையற்ற தன்மைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் ரோஹின்கியா முஸ்லீம்கள் என்பது மட்டும் உண்மை.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் இவ்விவகாரங்களில் ஈடுபட்ட போதிலும் ரோஹின்கியா இன மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள், கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் ஆழமான விசாரணைகளை நடத்தவில்லை எனவும் விமர்சனக் கருத்துக்கள் நிலவுகின்றன. ஊடகச் சுதந்திரம் என்பது ஜனநாயக நாட்டில் மிகவும் அவசியமானதாகும், எனினும் மியன்மார் அரசு ராக்கைன் மாநிலத்தினுள் ஊடகவியலாளர்களையும், உதவி வேலையாளர்களையும் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன. அதுமட்டுமன்றி ரோஹின்கியா முஸ்லீம்களுக்கு யாரும் உதவினால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று கருதப்படுவர் என்ற சட்டங்களும் அந்நாட்டினுள் நிலவுகின்றது.

ரோஹின்கியா முஸ்லீம்களைப் பாதுகாப்பதற்காக “அரகேன் ரோஹின்கியா பாதுகாப்புப் படை” (ARSA) எனப்படும் படைக்குழு இயங்குகின்றது. மியன்மார் அரசும், இராணுவமும் அப்படையைப் பயங்கரவாதக் குழுவாகக் கருதி தாக்குதல்களை மேற்கொள்கின்றது. இப்படை மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவே குரல் கொடுக்கின்ற படையாகும். எனினும் இராணுவம் இப்படையினர் என்ற ஐயத்தின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதாரண மக்களையே கொன்று குவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மியன்மாரில் இடம்பெறும் இராணுவத்தின் செயற்பாடுகள் போர்க்குற்றத்திற்கு சமமானது எனக் கூறியுள்ளது. அத்தோடு அதன் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்ரேரெஸ் ரோஹின்கியா மக்களுக்கெதிரான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும், வன்முறைகளையும் மனிதாபிமானப் பேரழிவுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் வட கொரியா, கட்டார் நாடுகளில் இடம் பெற்ற பொருளாதாரத் தடைகளைப் போன்று மியன்மாருக்கும் பாரிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று கடுமையாகக் கூறியுள்ளார்.ஒரு நாடே தன் நாட்டின் பூர்வீகக் குடிகள் மீது வன்முறைகளையும், கொடூரங்களையும் இழைப்பது மனிதப் பாதுகாப்பிற்கு எதிரானதாக உள்ளது. இக்கொடூரங்களை தட்டிக் கேட்க வேண்டிய இஸ்லாமிய நாடுகளே ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் தங்கள் நாடுகளுக்குள்ளேயே நடத்தி விட்டுச் சமூக வலைத்தளங்களின் முலமாக இரங்கல்களை மட்டும் விடுப்பது வருத்தத்திற்குரியதாகும். எனவே “இனம்”, “மதம்” என்னும் வார்த்தைகளை மறந்து மனிதாபிமானமான ரீதியில் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ரோஹின்கியா இன மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது தற்கால தேவைப்பாடாக உள்ளது.

உசாத்துணைகள்


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/community/p18.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License