இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

தேவாங்கர்

வி. பி.மணிகண்டன்


கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்த தேவாங்கர் சமுதாயத்தினர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். தமிழ்நாட்டில் கன்னட மொழி பேசும் இவர்கள், தேவாங்க செட்டியார், சேடர் எனும் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சில ஊர்களில் குறிப்பிடத்தக்க அளவில் வசித்து வருகின்றனர். நெசவுத் தொழிலைத் தங்களது குலத் தொழிலாக செய்து வந்த இவர்கள் இந்து சமயத்தின் சைவம், வைணவம் என்கிற இரு பிரிவுகளிலும் தங்கள் தெய்வ வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

சமுதாய வரலாறு

தேவாங்க மன்னன் தேவலர், வித்யாதரன், புஷ்பதந்தன், வேதாளம், வரரிஷி, தேவசாலி, தேவதாஸ் என்கிற பெயர்களில் எடுத்த இவ்வேழு அவதாரங்களிலும் அனைவருக்கும் உபதேச காரண குருவாய் விளங்கினார். இவர் காலத்தில் ஆட்சிப் பீடமும், குரு பீடமும் ஒன்றாய் விளங்கின. அவருக்குப் பின் காளசேனன் என்ற தேவாங்க மன்னர் அரசாண்டு வந்த காலத்தில் வம்சவிருத்தி இல்லாமல் போயிற்று. மனம் வருந்திய காளசேனன் இறைவனிடம் வேண்ட கெளதம மகரிஷியைக் கொண்டு புத்ரகாமேஷ்டி யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தின் பயனாய் பத்தாயிரம் குழந்தைகள் தோன்றினர். இதனை ‘அத்துசாவர குலன ஆதரிசிதவளு நீனு’ என்னும் திருத்தண்டக பத்யம் தெரிவிக்கிறது. காளசேன மன்னன், இந்த பத்தாயிரம் குழந்தைகளுக்கு, எழுநூறு மகரிஷிகளைக் கொண்டு உபதேசம் மற்றும் தீட்சைகளைச் செய்தான். குழந்தைகளுக்கு தீட்சிதை செய்த மகரிஷியின் பெயரில் கோத்திரங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு குழந்தையின் பின் வந்த அவர்களின் வம்சத்தினரும் அந்த மகரிஷியின் பெயரிலான கோத்ரங்களால் அழைக்கப்பட்டனர்.

வங்குசம் (வம்சம்), பெடகு, வீட்டுப்பெயர் என்பன அனைத்தும் ஒரே பொருளைக் குறிப்பதாகவே உள்ளன. வீட்டுப் பெயர்கள் வழியாகத் தன் குடும்பத்தின் வழிமுறையைக் கண்டு கொள்ள முடியும். இவர்கள் வசித்த இடங்கள், செய்த தொழில்கள், பண்பாடுகள், தோற்றம் முதலான காரணங்களால் ஒரே கோத்ரத்தினுள் பல வங்குசங்கள் (வம்சங்கள்) காரணப் பெயர்களாகத் தோன்றியிருக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் கன்னடம் பேசும் தேவாங்கர் சமுதாயத்தினரிடையே 101 வங்குசங்கள் (வம்சங்கள்) இருப்பதாகப் சமூகப் பெரியவர்கள் சொல்கின்றனர். அவைகளில் குறிப்பாக கீழ்காணும் கோத்ரங்களும் அதன் கீழான வங்குசங்கள் (வம்சங்கள்) பரவலாக இருக்கின்றனர்.கோத்ரமும் வங்குசமும்

அகத்திய மகரிஷி கோத்ரம்

அகத்திய மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசங்கள் (வம்சங்கள்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றன.

1. லதாலதவரு (லத்திகார்ரு)

லதா என்றால் கொடி என்று பொருள். இவர்கள் கொடி போல் எங்கும் பரந்து படர்ந்து இருப்பர். எனவே, "லதாலதவரு" என்னும் பெயர் பெற்றனர். ஆனால் இந்த "லதாலதவரு" என்னும் பெயர் லத்திகார்ரு என மருவி வழக்கத்தில் உள்ளது.

2. பசுபுலதவரு

திருமணத்தில் மஞ்சள் கொம்பு மரியாதை பெறுவதாலும், தேவாங்கர் அனைவருக்கும் பொதுவான தெய்வமாக இருக்கும் ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவிற்கு மஞ்சள் பண்டாரம் தரும் திருப்பணியைச் செய்வதாலும் இவர்களுக்கு பசுபுலதவரு எனப் பெயர் ஏற்பட்டது.

3. முத்தினதவரு

முத்தின் மதிப்பை சரியாகக் கணித்து, மன்னர்களிடம் பரிசு பல பெற்றவர்கள் இவர்கள், முத்தினதவரு என அழைக்கப்பட்டனர். இதனால் இவர்களுக்கு தேவாங்கர் சமுதாய விழாக்களில் இன்றும் "முத்தின விளேவு" என்று பரிசு தரப்படுகிறது.அசிதேவ மகரிஷி கோத்ரம்

அசிதேவ மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசங்கள் (வம்சங்கள்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றன.

1. அந்தலதவரு

அந்தலம் என்பது காற்சிலம்பு போன்ற கழல். இச்சிலம்பினை வீரத்தின் சின்னமாக ஒற்றைக் காலில் அணிபவர் என்று இவர்களை அடையாளப்படுத்தும் விதமாக "அந்தலவரு" என அழைக்கப்பட்டனர். "அந்தலதவரு" என்பது தற்போது "ஏந்தேலாரு" என மருவியுள்ளது.

2. கடுபுலதவரு

கடுப்பு என்பது தெலுங்கில் வயிற்றினைக் குறிக்கும். வயிற்றினை ஒட்டி வந்த பெயர் என்கிறார்கள். இதனடிப்படையில் "கடுபுலதவரு" என அழைக்கப்பட்டனர்.

3. பெளஞ்சலதாரு

மாங்கல்யம், பூனூல் இவற்றை தானம் செய்பவகள் "பெளஞ்சலதாரு" என அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் "உஞ்சதவரு" என்று அழைக்கப்படுகின்றனர்.

கனக மகரிஷி கோத்ரம்

கனக மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசம் (வம்சம்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றது.

1. மாலேலாரு

புஷ்ப மாலை கொண்டு தொண்டு புரிபவர்கள் "மாலேலாரு" எனும் பெயரில் அழைக்கப்பட்டனர்.கார்த்திகேய மகரிஷி கோத்ரம்

கார்த்திகேய மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசங்கள் (வம்சங்கள்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றன.

1. மரளேலாரு மரளி என்பது கர்நாடகாவில் மைசூர் அருகில் உள்ள கொள்ளேகாலம் எனும் ஊருக்கருகில் உள்ள ஊர். இவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் இந்த ஊரின் பெயரால் அழைக்கப்பட்டனர்.

2. கல்கண்டதவரு

கல்கண்டு போன்று இனிமையாக பேசக் கூடியவர்கள் எனும் பொருளில் "கல்கண்டதவரு" என அழைக்கப்பட்டனர்.

கெளசிக மகரிஷி கோத்ரம்

கெளசிக மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசம் (வம்சம்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றது.

1. அந்தலதவரு

அந்தலம் என்பது காற்சிலம்பு போன்ற கழல். இச்சிலம்பினை வீரத்தின் சின்னமாக ஒற்றைக் காலில் அணிபவர் என்று இவர்களை அடையாளப்படுத்தும் விதமாக "அந்தலவரு" என அழைக்கப்பட்டனர். "அந்தலதவரு" என்பது தற்போது "ஏந்தேலாரு" என மருவியுள்ளது. அசிதேவ மகரிஷி கோத்ரத்திலும் இந்த வங்குசம் (வம்சம்) உள்ளது.

சதாநந்த மகரிஷி கோத்ரம்

சதாநந்த மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசங்கள் (வம்சங்கள்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றன.

1. ஹிரேமனெயவரு

புத்திர காமேஷ்டி யாகத்தில் உதித்த பத்தாயிரம் குழந்தைகளில் முதல் குழந்தைக்கு சதாநந்தர் தீட்சை செய்ததால் இவர்கள் பெரியவர்கள், பெரிய வீட்டுக்காரர்கள் எனப்படுகிறார்கள். இவர்கள் "ஹிரேமனெயவரு" என அழைக்கப்பட்டனர். இப்போது "இருமனேரு" என்று மருவி அழைக்கப்படுகிறது.

2. பொம்மனதவரு

பொம்மண்ண சுவாமியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்கள் "பொம்மனதவரு" எனும் பெயரில் அழைக்கப்பட்டனர்.

சங்கு மகரிஷி கோத்ரம்

சங்கு மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசம் (வம்சம்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றது.

1. குடகோலதவரு

இரம்பம் போல் உள்ள நெல் அரிவாளின் பெயர் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் உள்ளது. இவர்கள் "குடகோலதவரு" என அழைக்கப்பட்டனர். இப்பெயர் தற்போது மருவி ‘குடிகேலாரு’ என்று மாறியிருக்கிறது.

சோமகல்ய மகரிஷி கோத்ரம்

சோமகல்ய மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசம் (வம்சம்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றது.

1. பாலேலாரு

வேணுகோபால் சுவாமி மற்றும் பாலா பரமேஸ்வரியை வழிபடுபவர்கள் அனைவரும் "பாலேலாரு" என்று அழைக்கப்பட்டனர். மனுமகரிஷி கோத்ரத்திலும் "பாலேலாரு" என்ற வங்குசம் (வம்சம்) இருக்கின்றது.பதஞ்சலி மகரிஷி கோத்ரம்

பதஞ்சலி மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசங்கள் (வம்சங்கள்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றன.

1. சித்துகொள்னேரு

சித்த புருஷர் ஒருவரை தம் வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்களை "சித்துகொள்னேரு " என்று அழைக்கப்பட்டனர்.

2. மாலிலாரு

ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கும், அம்மன் திருவிழாவிற்கும் பூ மாலை தரும் திருத்தொண்டு செய்பவர் "மாலிலாரு" என அழைக்கப்பட்டனர். கனக மகரிஷி கோத்ரத்திலும் "மாலேலாரு" என்று ஒரு வங்குசம் (வம்சம்) உள்ளது.

3. ஹிரேமனெயவரு

பெரியவர்கள், பெரிய வீட்டுக்காரர்கள் எனப்படும் இவர்கள் "ஹிரேமனெயவரு" என அழைக்கப்பட்டனர். இப்போது "இருமனேரு" என்று மருவி அழைக்கப்படுகிறது. சதாநந்த மகரிஷி கோத்ரத்திலும் "இருமனேரு" என்று ஒரு வங்குசம் (வம்சம்) உள்ளது.

பர்வத மகரிஷி கோத்ரம்

பர்வத மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசம் (வம்சம்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றது.

1. கஞ்சல குண்டதவரு

கஞ்சம் என்றால் தாமரை. தாமரை வடிவமாக யாக குண்டம் அமைத்து யாகம் செய்தவர்கள் என்றும், கோமயத்திற்கு கஞ்சல என்பது பெயர். கஞ்சலம் தெளித்து தலசுத்தி முதலியன செய்து யாகம் வளர்த்து ஆசாரசீலர்களாக வாழ்ந்தவர்கள் என்றும் பொருள்படும் வகையில் இவர்கள் "கஞ்சல குண்டதவரு" என்று அழைக்கப்பட்டனர்.

மநு மகரிஷி கோத்ரம்

மநு மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசம் (வம்சம்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றது.

1. பொஜ்ஜேலாரு

போஜள்ளி என்னும் ஊரைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்று பொருள்படும் வகையில் இவர்கள் "பொஜ்ஜேலாரு" என்று அழைக்கப்பட்டனர்.

மாண்டவ்ய மகரிஷி கோத்ரம்

மாண்டவ்ய மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசம் (வம்சம்) அனைவருக்கும் தெரிந்தவையாக இருக்கின்றது.

1. பக்தி மால்யதவரு

பக்தியை மாலையாக அணிந்தவர் எனும் பொருளில் "பக்தி மால்யதவரு" என்று அழைக்கப்பட்டனர். இப்போது இது "பஹீத்மல்லனாரு" என்று மருவி அழைக்கப்படுகிறது.

வரதந்து மகரிஷி கோத்ரம்

வரதந்து மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசம் (வம்சம்) அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கின்றது.

1. கபாலதவரு

பிரம்ம கபாலம் வைத்து ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வழிபடும் வழக்கமுடையவர்களை "கபாலதவரு" என்று அழைத்தனர். தற்போது "கப்பேலாரு" எனும் பெயரில் அழைக்கப்படுகின்றனர். ஜமதக்நி மகரிஷி கோத்ரத்திலும் "கப்பேலாரு" என்று ஒரு வங்குசம் (வம்சம்) உள்ளது.

விஸ்வாமித்ர மகரிஷி கோத்ரம்

விஸ்வாமித்ர மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசம் (வம்சம்) அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கின்றது.

1. அம்பர கொண்டதவரு

நெல்லூரில் உள்ள அம்பர கொண்ட மலையைச் சார்ந்தவர்கள் "அம்பரகொண்டதவரு" என்று அழைக்கப்பட்டனர். தற்போது "அம்புகொள்னேரு" என்று மருவி அழைக்கப்படுகிறது.

ஜமதக்நி மகரிஷி கோத்ரம்

ஜமதக்நி மகரிஷி கோத்ரத்தில் கீழ்கண்ட வங்குசம் (வம்சம்) அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கின்றது.

1. கபாலதவரு

பிரம்ம கபாலம் வைத்து வழிபடும் இவர்கள் "கபாலதவரு" என்று அழைக்கப்பட்டனர். தற்போது "கப்பேலாரு" எனும் பெயரில் அழைக்கப்படுகின்றனர். வரதந்து கோத்ரத்திலும் "கப்பேலாரு" என்று ஒரு வங்குசம் (வம்சம்) உள்ளது.திருமண உறவுமுறைகள்

தேவாங்கர் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் அவர்களின் குழந்தைகள் தந்தை சார்ந்துள்ள வங்குசம் (வம்சம்) அவர்களுடைய வங்குசமாகக் கொளளப்படுகிறது. தங்கள் வங்குசம் தவிர பிற வங்குசத்தைச் சேர்ந்தவர்களை திருமணம செய்து கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

திருமண நிச்சயதார்த்த சடங்குகள்

1. மணமகள் இல்லத்தில் தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

2. மணமகன் வீட்டார் சீர்வரிசைத் தட்டுகளுடன் மணமகள் வீட்டிற்கு வந்து தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் மணமகளை நிச்சயதார்த்தம் செய்து மணப்பெண்ணை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்.

3. தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரரிடம் மணமகன் வீட்டார் அந்த ஊர் தேவாங்கர் சாதி அமைப்பில் நிர்ணயித்துள்ள பணம் செலுத்தி மணப்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

4. மணபெண்ணுக்கு மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் சீர்வரிசைகள் செய்து நலுங்கு வைக்க வேண்டும்.

5. இதன் பின்பு மணப்பெண் தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர்ப் பெரியோர்களிடம் வணங்கி வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

6. இதன் பிறகு மணமகன் வீட்டார் மணப்பெண் உறவினர்களைத் திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அனைவரது முன்னிலையிலும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

திருமணச் சடங்குகள்

முகூர்த்த நாளின் முதல் நாள் இரவு மணமக்கள் தாய்மாமன்களால் வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு ஊர்வலம் வரவேண்டும். இப்போது இது வழக்கத்தில் அருகி வருகிறது.

வீரமாஸ்தி கும்பிடுதல்

தேவையான பொருட்கள்

மணமக்கள் அணிந்து கொள்ள தலா 2 ஜதை வேஷ்டிகள் வீதம் – 4 ஜதைகள்
ஈரிழை சிவப்பு துண்டுகள் – 4
கூரை புடவை ( கோலமல சேலை ) – 1 செட்
தாலி, கால் மிஞ்சு
அங்குநூல், காதோலை கருமணி, திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி முதலியன.

- பூஜை முடிந்தபின் மணமகனுக்கு தாய்மாமன் மிஞ்சு அணிவிக்க வேண்டும்.

இரவு விருந்து (கை நீர் சொம்பு வழங்குவது)

மணமகன் வீட்டினர் தன்னுடைய தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரருக்கும், மணப்பெண் வீட்டாருக்கும் கை நீர் சொம்பு வழங்க வேண்டும். செட்டிமைக்காரர் ஸ்தல பெத்தருக்கும், மணப்பெண் வீட்டார் சொந்தக்காரருக்கும் தங்களிடம் உள்ள கைநீர் சொம்பைக் கொடுத்து விருந்துக்கு அழைக்க வேண்டும். மணமகன் வீட்டினர் தன்னுடைய சொந்தக்காரருக்குக் கை நீர் சொம்பு கொடுத்து உறவினர்கள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைக்க வேண்டும்.
பூஜை

தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் அமர கம்பளி விரித்து வைக்க வேண்டும். அவரிடம் மணமக்கள் குடும்பத்தினர் திருமணத்தை நல்ல முறையில் சமுதாயத்திற்குரிய பூஜைகள் மற்றும் சடங்குகளைச் செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

கங்கணம் கட்டும் போது அரணை ஒட்ட தேவையான பொருட்கள்

அரணை முட்டிகள் - 6
முச்சளம் - 6
மொந்தை - 4
ஊசி மூடிகள் - 2
மண் தீபங்கள் - 7
மண் தூபக்கால்- 2


1. பூஜை அறையை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு அதன் மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். பூஜையில் வைக்கப்படும் அரணை முட்டிகள் மற்றும் மொந்தையில், பச்சை பயறு, அரிசி, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, விபூதி, குங்குமம், பூ ஆகிய பொருட்களை சிறிது போட்டு வைக்க வேண்டும்.

2. அரணை முட்டிகளை முச்சளங்களினால் கவிழ்த்து மூட வேண்டும். மாவிளக்கு 7 தயார் செய்ய வேண்டும். அவைகளில் இரண்டினை முச்சளத்தின் மீதும் மீதி 5விளக்குகளை மொந்தையின் முன்புறம் வரிசையாக வைக்க வேண்டும். விளக்குகளுக்கு நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

3. கங்கணம் கட்டும் பூஜை அறையில் கத்திரிக்காய் -3, வெள்ளைப் பூண்டு -3, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, மல்லிகை பூ ஆகியவற்றை கோர்த்து மூன்று செட் தயார் செய்து அவைகளை வரிசையாக தொங்கவிட வேண்டும். குண்ட்டை (படமரம்) வைத்து அதன் மீது வண்ணான் மாத்து போட வேண்டும்.

4. கம்பளியில் செட்டிமைக்காரருக்கு வலதுபுறம் மணமகன் வீட்டாரும், இடதுபுறம் மணமகன் வீட்டாரும், அமர வேண்டும். முதலில் மணமகன் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும். பிறகு மணமகள் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும்.

5. முதலில் மணப்பெண் வீட்டினரும், மணமகன் வீட்டினரும், மூன்று முறை தனித்தனியாக தங்களின் வங்குசம், கோத்திரம், வம்சப் பெரியோர்களின் பெயர், மணமக்களின் பெயர் ஆகியவைகளை மூன்று முறை கூறி மூன்றாவதாக சொல்லும் போது மணப்பெண் கொடுப்பதாக மணமகன் வீட்டாரிடம் கூறி, தாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

6. கம்பளியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சந்தனம் கொடுத்து தாம்பூலம் வழங்க வேண்டும்.

கங்கணம் கட்ட தேவையான பொருட்கள்

1. மஞ்சள்துணி, மஞ்சள் கொம்பு, கம்பளி கயிறு இரும்பு வளையம், வெற்றிலை பாக்கு, மணமகன் கையில் வைத்துக் கொள்ள ஜம்புதாடிக் கத்தி.
2. கம்பளியில் செட்டிமைக்காரர் முன்னால் வைக்கப்பட்டுள்ள ஓலைப் பேழையில் இருக்க வேண்டிய பொருட்கள்.வெற்றிலை பாக்கு, பூ 21 செட், எலுமிச்சம் பழம் 2, வாழைப்பழம் 2, சந்தனக் கிண்ணம், அட்சதை, கற்பூரம், ஊதுபத்தி.

3. செட்டிமைக்காரர் வசம் மணமக்கள் வீட்டினர் மஞ்சள் முடிப்பு கொடுத்தல்.

4. மணமகன் வீட்டினர் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ, பணம் வைத்து முடி போட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும்.

5. மணமகள் வீட்டார் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ வைத்து முடிபோட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும்.

6. செட்டிமைக்காரர் இரண்டு மஞ்சள் முடிப்புகளில் பணம் உள்ள மஞ்சள் முடிப்பினை அவிழ்த்து குறிப்பிட்ட பணத்தை எடுத்துக் கொண்டு அதை முடி போட்டு மணமகள் வீட்டாரிடம் கொடுத்து, பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மணமக்கள் சொந்தக்காரர்கள் செட்டிமைக்காரரிடம் இருந்து மஞ்சள் முடிப்பினன பெற்றுச் சென்று மணமக்களுக்கு கங்கணம் கட்ட வேண்டும்.

7. மணமக்கள் செட்டிமைக்காரர் மற்றும் பெரியோர்களை வணங்க வேண்டும்.

8. மணமக்கள் கங்கணம் கட்டிக் கொண்ட பிறகு, மணப்பந்தலை விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது.

9. அட்சதையைக் கம்பளியில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

ஸ்தலது கொம்பு விவரம்

அரச மரத்தின் அடிப்பாகத்தில் பிரம்மனும், நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவனும் வாசம் செய்கின்றனர். எனவே ஸ்தலது கொம்பு திருமூர்த்திகளுக்கு வணக்கம் செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகும்.

மணமகன் மணவறையில் அமர்வதற்கு முன் பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

பூஜைக்கு தேவையான பொருட்கள்

அரசமரக் கொம்பு, மஞ்சள் கொம்பு, மண் தீபம், அச்சு வெல்லம், பச்சரிசி 1 படி, தேங்காய் -3, பழம் -2, வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, வாழை இலை, குங்குமம்

பூஜை முறை

1. கோவிலில் அரச இலையில் பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
2. மணமகன் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் போது மணமகனின் சகோதரி மேற்கண்ட பூஜைப் பொருட்களுடன் புது கூடையில் மணமகன் அணிந்து கொள்ளும் மஞ்சள் வேஷ்டி, பணம் மற்றும் புது பாய் எடுத்துச் செல்ல வேண்டும்.

3. பூஜைக்கு கொண்டு செல்லும் 3 தேங்காய்களில் 1 பிள்ளையாருக்கும், 2 வது தேங்காய் பஜனை கோவிலுக்கும், 3 வது தேங்காய் மணமகளின் மடியில் பச்சரிசியுடன் வைத்து கட்டிக் கொள்ளவும் வேண்டும்.

4. மணமகன் பிள்ளையார் கோவிலுக்கு போகும்போது தாய்மாமன் கொடுத்த அங்கவஸ்திரத்தை வலது தோள் மீதும், மஞ்சள் வேஷ்டியை இடது தோள் மீதும் அணிந்து செல்ல வேண்டும். பூஜை முடித்து வரும்போது மணமகளின் சகோதரி மணமகனுக்கு பாத பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். மணமகனுக்கு பால், பழம் கொடுக்க வேண்டும். தாலி கட்டிய பின் கம்பளி விரித்தல்.5. செட்டிமைக்காரர் உறவினர் முன்னிலையில் மணமக்களின் தாய்மாமன்கள் கட்டிய கங்கணத்தை அவிழ்த்து அதையும் ஜம்புதாடி கத்தியையும் செட்டிமைக்காரர் வசம் ஒப்படைத்தல், செட்டிமைக்காரர் மணமகன் வீட்டாரிடம் பணம் பெற்று கங்கண துணியில் வைத்து மஞ்சள் முடிப்பை மணமகள் வீட்டாரிடம் கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ள சொல்ல வேண்டும். காலி மஞ்சள் முடிப்பை மணமகன் வீட்டாரிடம் கொடுக்க வேண்டும். பின் இரு வீட்டாரிடமிருந்தும் கங்கண முடிப்பை செட்டிமைக்காரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.

6. செட்டிமைக்காரர் வரிசைப்படி வங்குசதாரர்களை அழைத்து செலவு சம்பாரம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும்.

ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் ஆலயம்

இந்து சமயத்தின் சைவம், வைணவம் என்கிற இரு பிரிவுகளில் தங்கள் தெய்வ வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வரும் தேவாங்கர் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் ஊர்களில் பொதுவாக இந்த ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்குக் கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் ஊர்களில் எல்லாம் சவுடேஸ்வரி அம்மனுக்குக் கோவில்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. (ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் எனும் பெயரில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆன்மீகம் பகுதியில் தனிக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.)

இலக்கியத்தில் தேவாங்கர்

‘தேவ அங்கம்' எனப்பட்ட பட்டுத்துணி விரிப்புகளில் அங்கப் போர்க் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டன என்றும், அத்தகைய ஓவியத் துணிகள் சில இலங்கையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றும் கே.கே. பிள்ளை குறிப்பிட்டுள்ளார். (p.170, South India and SriLanka, K.K. Pillai, University of Madras, 1975.)

சிலப்பதிகாரத்தில் (14:108) இடம்பெற்றுள்ள, "வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட அகிலும் துகிலும்'' என்ற வரியிலுள்ள "துகில்'' என்பதன் வகைகளுள் ‘தேவாங்கு' என்ற வகையினை உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். (பக். 378, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் - உ.வே.சா. நூலகப் பதிப்பு, 1976.) இது வேலைப்பாடமைந்த துகில்வகை எனப் பிங்கல நிகண்டால் அறியலாம். அங்கப் போர்க் காட்சிகள் வரையப்பட்ட பட்டுத் துணியே தேவாங்கு எனப்பட்டது என்றும், இத்தகைய நெசவு வேலை செய்தோர் தேவாங்கர் என அழைக்கப்பட்டனர்.அரசியல் பங்களிப்பு

தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் பங்களிப்பு செய்வது குறைவாகத்தான் இருக்கிறது. தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் சிற்றூராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சில இடங்களில் தலைவர் பதவியுடன் சில உறுப்பினர்கள் பதவியையும் பெற்ரிருக்கின்றனர். இச்சமுதாயத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பின்ராக ஒருமுறை இருந்திருக்கிறார். தற்போது இதே போடிநாயக்கனூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட எஸ்.லட்சுமணன் என்பவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து இருக்கிறார். (பிற அரசியல் பிரமுகர்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/community/p5.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License