இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

கவிதைகளின் நவீனப்போக்கு (2000 ஆண்டிற்குப் பின்)

மு. பூங்கோதை


முன்னுரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென்று தனித்த நிலையான முத்திரையைக் கவிதைகள் பெற்றுள்ளன. காலங்காலமாக மனித உணர்வுகளும், உணர்ச்சி வெளிப்பாடுகளும், சமூகப்பிரச்சனைகளும் கவிதைகளாக வடிக்கப்படுகின்றன. மனிதன் தன்னை நடை, உடை, பாவனை என நவீனப்படுத்திக் கொள்வது போலவே கவிஞர்கள் தாங்கள் படைக்கின்ற கவிதைகளையும், காலத்தின் மாற்றத்திற்கேற்பவும், தேவைக்கேற்பவும் நவீனத்தன்மையுடன் படைக்கின்றனர். கவிதைகளின் நவீனப்போக்கினை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

நவீனம் - வரையறை

நவீனம் என்ற சொல்லிற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, “புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டமைவது” (1) எனப் பொருள் தருகிறது. “நவீனம் என்னும் சொல் புதியது, புதுமை, மறுமலர்ச்சி என்னும் பொருண்மையில் கட்டமைக்கப்பட்டு தமிழில் வழங்கி வரும் சொல்லாகும்” (2) என்று சி. ரமேஷ் சுட்டுகிறார்.

கவிதைகளின் நவீனப்போக்கு

கவிஞர்கள் தாங்கள் படைக்கின்ற கவிதைகளை, இன்றைய அவசர உலகின் தேவைக்கு ஏற்பவும், காலத்தின் மாற்றத்திற்கு ஏற்பவும் புதுமையான முறையில் புதுமையானவற்றை கவிதைகளாக பாடுகின்றனர். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற மொழிக்கேற்பக் கவிதைகள் பல நிலைகளில் மாற்றம் பெற்றுள்ளது. ‘மாற்றம் காலத்தின் நியதி. பழைமை புளித்துப் போகும் போது பயனற்றுப் போகும் போது புதுமை பிறக்கிறது. பெரு நிகழ்ச்சிகளால் மாறும் போது புதுமை பிறக்கிறது. கால வகையினால் பழைமைகள் கழிந்து புதுமைகள் புகுகின்றன’ (3) என்ற அப்துல்ரகுமானின் வரிகளுக்கு ஏற்பக் கவிதைகள் பழைமை வடிவமான மரபுகவிதை என்ற நிலையில் இருந்து மாறிப் புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ட்ரியூ, லிமைக்கூ, ஹைபுன், லிமிர்ப்புன் என பல வடிவங்களிலும், காதல், வீரம், போர், கொடை, பக்தி போன்றவற்றைப் பாடின பாடுபொருள்களை விடுத்துச் சமூகத்தில் யதார்த்தமாக நடக்கின்ற நிகழ்வுகள், சமூகச் சீரழிவுகள், பெண்களின் நிலை, அறிவியல் வளர்ச்சியின் விளைவுகள், அரசியல் ஊழல்கள், ஆகியவற்றைக் கண்டு கவிஞனது உள்ளத்தில் உதித்த கருத்தை நவீனகாலத்தில் கவிதைகளாக படைக்கின்றனர். கவிதைகளின் நவீனப்போக்கினை,



1. புறவய நவீனப்போக்கு

2. அகவய நவீனப்போக்கு

என்ற இருநிலைகளில் ஆராயலாம்.

புறவயநவீனப்போக்கு

புறவயம் என்பது கவிதையின் வடிவத்தைக் குறிக்கிறது. இலக்கியம் தோன்றிய காலகட்டத்தில் மரபுகவிதைகள், பாஅமைப்பு, சீர், தளை, அடி, தொடை, ஆகியவற்றில் வடிவில் கொண்டுவந்த முறைமை காணப்பட்டது.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே” (நன்.462) (4)

என்ற பவணந்திமுனிவரின் நூற்பா கூறுகின்ற முறைமை போன்று, கால வெள்ளத்தினாலும், சமூக மாற்றத்தினாலும் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபுக்கவிதை படைப்போர் இன்றியும், படிப்போர் இன்றியும் வழக்கொழிந்துவிட்டது. தற்காலத்தில் கவிதையின் புறவயத்தில் பலவகையான நவீனப்போக்குகள் பின்பற்றப்பட்டு உள்ளன. ஹைக்கூ, சென்ட்ரியூ, லிமைரைக்கூ என புறவயத்தில் பல நவீனப்போக்கினை தற்காலக் கவிதைகள் பெற்றமைந்துள்ளன.

கவிதைகளின் நவீன வடிவம்

தற்காலத்தில் படைக்கப்படுகின்ற கவிதைகள் மிகவும் எளிமையான அமைப்புடன் அமைந்துள்ளது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்ற வகையில் அமைந்துள்ளது. மூன்று வரிகளினால் அமைந்து சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கருதிய பொருளைக் கூற ஹைக்கூ போன்ற நவீன கவிதை வடிவங்களைக் கவிஞர்கள் கையாளுகின்றனர். மூன்று வரிகளில் நதிகளில் நீர், மணல் சுரண்டப்படுவதைக் கவிஞர் கூறும் முறையினை,

“லாரி ஏறி
செத்தது
நதி”
(ப.பா.ப.45) (5)

என்று எளிமையான புறவய அமைப்பில் சொற்களின் பயன்பாட்டை குறைவாகவும் கருத்தினைச் செறிவாகவும் தருகின்ற நவீனப்போக்கு முறைமை தற்காலக் கவிதைகளில் காணப்படுகின்றது.

கவிதைகளின் அகவயத்தில் நவீனம்

அகவயம் என்பது கவிதையில் கவிஞன் பாடுகின்ற கரு பாடுபொருள் ஆகும். ‘கவிதையில் ஒரு படைப்பாளன் எதை உணர்த்த விரும்புகிறாரோ அதையே பாடுபொருள் அல்லது உள்ளடக்கம் என்கிறோம். கவிதையின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறி வந்திருப்பதைப் போலவே பாடுபொருளும் மாற்றமும் வளர்ச்சியும் பெற்றே வந்திருக்கிறது என்பது உண்மையாகும். உள்ளடக்கத்தில் புதுமை, உள்ளடக்கத்தில் கட்டுக்கோப்பு, உள்ளடக்கத்தில் அழகு ஆகிய மூன்றையும் கவிதையின் இயல்புகளாகச் சுட்டிக்காட்டும் அறிஞர்கள் உருவ இயல்புகளை விட உள்ளடக்க இயல்புகளே முக்கியமானவை’ (6) என யாப்பும் கவிதையும் என்ற நூலில் செல்வம் கூறுவதாக அப்துல்ரகுமான் சுட்டுவது இங்கு காண வேண்டிய ஒன்றாகும்.



நவீனப் பாடுபொருட்கள்

தமிழின் கவிதை மரபிற்கு நீண்டகால வரலாறு உண்டு. இயற்கை, காதல், வீரம் ஆகியவற்றைப் பாடுவதாக மரபுகவிதைகள் அமைந்திருந்தன. ஆனால் தற்காலப் புதுக்கவிதைகளோ மரபினைப் பாடுவதை விட சமூக யாதார்த்தத்தை, சமூகத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகள் தம் இதயத்தில் ஏற்படுகின்ற உணர்வு நெகழ்ச்சிகளைத் தம் கவிதைகளில் கவிஞர்கள் வடிக்க முயல்கின்றனர். தனிமனிதனுடைய மனத்தடுமாற்றம், சமூகச்சீரழிவுகள், அரசியல் போக்குகள், பெண்களின் நிலைகளை கருப்பொருளாக உள்வாங்கிக் கொண்டு கவிதையாளர்கள் நவீனத்தன்மையுடன் கவிதைகளை உருவாக்குகின்றனர். தற்காலக் கவிஞர்கள் சமூகத்தை உற்றுப் பார்க்கின்றனர். சமூகத்தில் அவர் கண்டு மனதை மகிழச்செய்த, கோபமுறச் செய்த, வருத்தமுறச் செய்த நிகழ்வுகளை கவிதையின் கருவாகக் கவிஞர்கள் கொள்கின்றனர். தற்காலக் கவிதைகளில் சமூகத்தின் யதார்த்தத்தைப் பதிவு செய்கின்ற வகையில் பாடுபொருட்கள் அமைந்துள்ளன. கவிதைகளில் பாடப்படுகின்ற பாடுபொருட்களை,

* புதிய கண்டுபிடிப்புகள்

* தற்கால அரசியல் நிலைப்பாடு

- இலஞ்சம்
- தேர்தல்திருவிழா
- அரசியல் பட்ஜெட்
- ஓட்டு இயந்திரம்

* சுற்றுச்சூழல்

* மாற்றுத்திறனாளி

* விலைவாசி ஏற்றம்

* நிகழ்வுப்பதிவுகள்

* மதுப்பிரச்சனை

என நிகழ்காலத்தில் தன் கண் முன்னே நிகழ்கின்ற சமூக சித்தரிப்புகளைக் கவிதையாக கவிஞர் வடிக்கின்றார்.

புதிய கண்டுபிடிப்புகள்

அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பலநிலைகளில் வளர்ச்சி கண்டு செயல்படுகிறது. அறிவியல் யுகத்தில் கணினி, இணையம், தொலைபேசி என தகவல் தொடர்புச் சாதனங்கள் பல்கிப் பெருகி உள்ளன. அறிவியல் வளர்ச்சியினால் பல நன்மைகள் விளைந்தாலும் அதனால் விளைகின்ற தீமைகள் மக்களைப் பெரிதும் பாதிக்கின்றது. குறிப்பாக, இளைஞர்களைப் பெரும் மனப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. இணையதளத்தில் இளைஞர்கள் மூழ்கிப் போகின்றனர். அண்டைவீட்டாரிடம் நட்பு கொள்வதைத் தவிர்த்து முகம் தெரியாத நபருடன் முகநூலில் நட்புகொண்டு உரையாடுகின்ற முறைமை தற்காலத்தில் செயல்படுகிறது. முகநூல் (பேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), சுட்டுரை (டுவிட்டர்) என மணிக்கணக்கு இல்லாமல் அரட்டையடிப்பதும், தகவலைப் பதிவதும், தகவலுக்கு விருப்பம் தெரிவிப்பதும், கருத்து சொல்வதும்தான் உலகம் என நினைத்து இளைஞர்கள் பலர் சீரழிகின்றனர். இதனைக் கவிஞர் எள்ளலோடு சொல்லும் முறையினை,



“வாட்ஸப்பென்ப ஃபேஸ்புக் டிவிட்டரென்ப இம்மூன்றும்
மோட்சமென்ப வாழும் உயிர்க்கு”
(க.பூ.ப.11) (7)

என்ற கவிதையின் வாயிலாக அறியமுடிகின்றது.

செல்போன் மோகம் மக்களை தீவிரமாகப் பற்றி இருப்பதை,

“செல்லிலார் எல்லாம் தமக்குரியர் செல்லுடையார்
என்றும் உரியர் பிறர்க்கு”
(க.பூ.க.6) (8)

“கண்டுகேட்டு பேசிமோந்து தொட்டறியும் ஐம்புலனும்
ஆண்ட்ராய்ட் கண்ணேஉள!”
(க.பூ.ப.11) (9)

என்ற அடிகளின் வாயிலாக நவீனயுகத்தில் அலைபேசியின் (செல்போனின்) தீவிரத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

தற்கால அரசியல் நிலைப்பாடு

மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் அரசியல் முறையினைப் போற்றி எழுதத்தக்க முடியாட்சி அமைந்து இருந்தது. ஆனால் தற்கால அரசியல் அமைப்பு முறையோ நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றைக் குழி தோண்டிப் புதைத்த நிலையினைக் காண முடிகிறது.

இலஞ்சம்

அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு மக்களிடம் வருவதைக் காட்டிலும் அவர்களுக்காகக் காந்தி ஓட்டு கேட்டு வருகிறார் என கவிஞர் எழுதுவதை,

“ஆளுங்கட்சி எதிர்கட்சி சுயேட்சை
அனைவருக்கும் வாக்கு கேட்டு
வலம் வரும் ‘காந்தி’!”
(பூ.ரா.38) (10)

என்ற கவிஞர் பாண்டுவின் கவிதை வரிகளின் வாயிலாக ஓட்டிற்குப் பணம் கொடுக்கின்ற செயலையும், பணத்திற்காகச் செயலையும், பணத்திற்காக மக்கள் ஓட்டினை விற்கின்ற செயலினையும் அறியமுடிகின்றது.



தேர்தல் திருவிழா

யாரை வேண்டுமானாலும் சமூகத்தில் நம்பிவிடலாம். ஆனால் அரசியல்வாதிகளையும், அவர்கள் அளிக்கின்ற வாக்கினையும் நம்ப இயலாத சூழல் நாட்டில் நிலவி வருகின்றது. அரசியல்வாதி தான் தலைமைப் பதவி வகிக்கவும், அவன் சார்ந்த அரசியல்கட்சி ஆட்சியில் அமரவேண்டும் என தேர்தலின் போது பல வாக்குறுதிகளை மக்களின் முன் அளிப்பார்கள். ஆனால் வெற்றி பெற்ற பிறகு அரசியல்வாதிகளுக்கு மக்களும் நினைவிலிருப்பதில்லை, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளும் நினைவிலிருப்பதில்லை. பின்பு ஐந்தாண்டுகள் கழிந்து மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும் போதுதான் மக்களும், வாக்குறுதிகளும் நினைவிற்கு வருகின்ற அரசியல்வாதியின் நிலையினைக் கவிஞர் சுட்டுவதை,

“ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வந்தாலும்
அன்று சொன்ன வாக்குறுதிகளையே
அசராமல் இன்றும் சொல்கின்றனர்
தேர்தல் களத்தில்”
(உ.தே.சி.12) (11)

என்ற கவிதை வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

அரசியல் பட்ஜெட்

மக்களுக்கு இலவசமாகப் பல பொருட்களை அளித்துவிட்டு மக்கள் அன்றாடம் உபயோகிக்கின்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசியல் அமைப்பு ஏற்றிடுவதை,

“கம்ப்யூட்டர் விலை குறைத்து
கத்திரிக்காய் விலை ஏற்றும்
கருத்தற்ற பட்ஜெட்டாய் இருந்தாலும்”
(உ.தே.சி.ப.3) (12)

என்ற கவிதை வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

ஓட்டு இயந்திரம்

தேர்தலில் ஓட்டு இட்டு அரசியல்வாதியைத் தேர்ந்தெடுத்து ஜனநாயகத்தை இயங்கச் செய்ய இயந்திரம் இருக்கின்றது. அதைப் போல நீதியற்ற அரசியலமைப்பினைச் செயலிழக்க வைக்க இயந்திரம் இருக்கிறதா என கவிஞர் வினவுவதை,

“ஐனநாயகத்தை இயக்கப்
பொத்தான் தந்தார்கள்!
நிறுத்த?”
(பூ.ரா.ப.87) (13)

என்ற கவிதை வரிகளின் வாயிலாக கவிஞரின் அரசியல் மீதுகொண்ட கருத்து புலப்படுகிறது.

சுற்றுச்சூழல்

பெருகி வருகின்ற மக்கள் தொகைப் பெருக்கம், வாகன நெரிசல், தொழிற்சாலைப் பெருக்கம் என அனைத்தும் பெருகியிருப்பதால் சுற்றுச்சூழலின் தூய்மை சுருங்குகின்றது. மனிதனின் அலட்சிய செயலினால் மண், நீர், காற்று, ஆகாயம் என அனைத்து இயற்கைகளும் அழிவை நோக்கி நகர்கின்றன. சுவாசிக்கத் தூய்மையான காற்று கிடைப்பதில்லை. வருங்காலத்தில் ஆக்ஸிஜன் இருக்குமா என்பது கேள்விக்குறி ஆகுகின்றது. ஓசோனில் ஓட்டை விரிந்து கொண்டே போகின்றது. உலகம் வெப்பமாகிக்கொண்டே செல்கிறது. சூழலைக் குளுமையாக்கி மழைக்குக் காணமாக இருக்கின்ற மரங்களை மனிதன் அழிக்கின்றான் என கவிஞன் சுட்டுவதை,

“மழைக்காக நடத்தும் யாகத்திற்கு
மரங்களை வெட்டி விறகாக்குபவர்கள்”
(உ.தே.சி.ப.24) (14)

என்ற கவிதை வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. உலகில் அபாயகரமான வாயுவை வெளியிடுகின்ற குளிர்சாதனப்பெட்டி, கருவி போன்றவற்றைப் பயன்படுத்துவதால் ஓசோனில் ஓட்டை விழுகின்றதைக் கவிஞர் கூறுவதை,

“பூமிப்படகு!
மூழ்கும் அபாயம்!
ஓசோனில் ஓட்டை!”
(உ.தே.சி.ப.24) (15)



என்ற கவிதை வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. மனிதர்கள் காற்றினை அசுத்தப்படுத்துவதால் காற்று மாசுபடுவதை காற்றாக மாறி கவிஞன் பாடுவதை,

“வரம்கொடுத்தவன் தலையிலேயே
கையை வைப்பதுபோல்…
என்தலையில்
மனிதகுலத்தின்
சாபக்கரங்கள்!

பெருகிவரும்
வாகனப்புகையில்
திக்குமுக்காடிப் போகிறேன்!

ஆலைக் கழிவுகளால்
கிழிந்து போகிறேன்!
யார் எதை எரித்தாலும்
கருகிப் போகிறேன்!
குளிர்சாதன இயந்திரங்கள்
என்னைச் சூடேற்றுவதை
உணர்வாயா...?”
(பூ.ரா.ப.98,99) (16)

என்ற கவிதை வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

மாற்றுத்திறனாளி

நாட்டினுடைய எதிர்காலத் தூண்களாக இருப்பவர்கள் குழந்தைகள் ஆவார்கள். ஆனால் அக்குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் மூளை பாதிக்கப்பட்டவர்களாகவும், மாற்றுத்திறனாளிகளாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர்களின் ஒழுக்கக் குறைபாட்டினால் குழந்தைகள் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களாகவும், அனாதைகளாகவும் அவலநிலைக்கு ஆளாகின்றனர். நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது. மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் செயல்பாட்டினை,

“…மேலும் அவளால்
தவிர்க்க முடியவில்லை
தலையைப் பலங்கொண்ட மட்டும்
சுவரில் மோதுவதை
தனது மணிக்கட்டினை வாயில்வைத்து
ரத்தம் வரக் கடிப்பதை
காரணங்களின்று நான் விரும்புகிறேன்”
(இ.அ.பக்.20) (17)

என ‘ஆட்டிசம்’ என்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் செயலைக் கவிஞன் பாடுபொருளாகக் கொண்டு எழுதியதை அறிய முடிகின்றது.

விலைவாசி ஏற்றம்

நாட்டினுடைய பொருளாதார ஏற்றத்தைக் கவிஞன் தனது கவிதையில் சுட்டிக்காட்டுகிறார். பொருட்களின் விலை அதிகமாக இருக்கின்ற உலகமயமாதலைக் கவிஞர் எள்ளலோடு கூறுவதை,

“ஒருரூபாய் என்பதை பார்த்ததும்
விட்டெறிந்தாள் வீட்டிற்குள்ளேயே!
இதுக்குத்தான் போடாதீங்கன்னு சொன்னேன்
உள்ளிருந்து வந்தது மனைவியின் அனுபவக்குரல்!
உலகமயமாதலின் விலைவாசி உயர்வு
பிச்சைக்காரியை மட்டும் விட்டுவிடுமா?”
(ப.பா.ப.18) (18)

என்ற கவிதை வரிகளின் வாயிலாக விலைவாசி ஏற்றத்தால் ஒரு ரூபாய் பிச்சையிட்டால் அதனை இரவலர்கள் ஏற்பதில்லை எனக் கவிஞன் கூறுவதன் மூலமாக உலகமயமாதலின் தீவிரத்தை அறிய இயலுகிறது.



நிகழ்வுப்பதிவுகள் (சுனாமி)

சமூகத்தில் நிகழ்கின்ற மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டு அந்நிகழ்வினால் எழுந்த பாதிப்புகளைக் கவிதையாகத் தருகின்ற போக்கு கவிஞர்களிடையே காணப்படுகிறது. தமிழகத்தை உலுக்கிய சுனாமியின் கோரத்தைக் கவிஞர் பதிவு செய்ததை,

“அழிவை ஏற்படுத்திவிட்ட
கடல் அரக்கனே
உனக்குத் தெரியுமா?
எத்தனை எதிர்கால
அப்துல்கலாம்களும்
அன்னை தெரசாக்களும்
அறிவியல் மேதைகளும்
உனக்குள் புதைந்து போனார்களே..?”
(உ.தே.ச.ப.43) (19)

என்ற கவிதை வரிகளின் மூலமாக நிகழ்வுகளை கவிதைகளாக்குகின்ற நவீனப்போக்குமுறை அறிந்துகொள்ள முடிகின்றது.

மதுப்பிரச்சனை

சமூகத்தில் எண்ணற்ற சீர்கேடுகள் முத்திரை பதித்து நிலைபெற்றுவிட்டன. அவை தீங்கு தருகின்றவை என்பதனை அறிந்தும் மனிதர்கள் மதுப்பழக்கத்திடமும், புகைப்பழக்கத்திடமும் சீரழிவதோடு சமூகத்தையும் சீரழிக்கின்றனர் குடிப்பழக்கம், நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என மதுபாட்டில்களில் எழுதப்பட்டு அபாயக்குறி இடப்பட்டிருந்தாலும் மனிதன் அதனைப் பொருட்படுத்தாமல் அதனால் கிடைக்கின்ற போதைக்கு அடிமையாகி அவனது உடல்நிலையைக் கெடுத்து அவனைச் சார்ந்த மனைவி, குழந்தைகளின் வாழ்வினையும் கேள்விக்குள்ளாக்குகிறான். இதனை,

“குடிச்சதால குடல் வெந்து
அல்சர் ஆச்சி!
இடையூறா இருமலும்
இடம் பிடிச்சாச்சி!
உடல் தேர
ஆஸ்பத்திரிச் செலவும் ஆச்சி
மனைவியோட ஒரு பவுனும்
தண்ணியாப் போச்சு!
பசங்களோட படிப்புமே
பாதியில போச்சு
அப்புறம்….
அப்பன் கடன் அடைக்க
அன்றாடக்கூலி ஆச்சு!”
(பூ.ரா.ப.59) (20)

என்ற கவிதை வரிகளின் வாயிலாக ஒரு மனிதன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானால் அவனோடு அவனது குடும்பமும் சீரழிவதை அறிந்துகொள்ள முடிகின்றது.

தொகுப்புரை

கவிதைகளின் புறவய நவீனப்போக்கினையும், அகவயமான பாடுபொருள்களில் கையாளப்பட்டுள்ள நவீனப்போக்கினையும் அறியமுடிகின்றது. கவிஞன் தன்னைச் சுற்றி இருக்கின்ற சமுதாயத்தைச் சூழலினை உற்றுநோக்கிக் கவிதையில் பதிவு செய்கின்ற நவீனமுறைகளை அறிந்துகொள்ள முடிகின்றது. சொற்களைக் குறைவாகப் பயன்படுத்தி செறிவான கருத்துப்பதிவினை கவிஞர் கையாளுகின்ற நவீனப்போக்கினை அறிந்துகொள்ள முடிகின்றது.

சுருக்கக்குறியீட்டு விளக்கம்

1.நன் - நன்னூல்

2. ப. பா - பறத்தலுக்கான பாடல்

3. உ. தே. சி - உளியைத் தேடும் சிற்பம்

4. க. பூ - கந்தகப்பூக்கள்

5. பூ. ரா - பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்

6. இ. அ - இறந்தவர்களை அலங்கரிப்பவன்

சான்றெண் விளக்கம்

1. க்ரியாவின் தற்காலத் தமிழகராதி, ப.806

2. சி. ரமேஷ் கட்டுரை, (இணையதளம்) 17.08.2015

3. சோதிமிகு நவகவிதை, ப.84

4. நன்னூல், ப.135

5. பறத்தலுக்கான பாடல், ப.45

6. சோதிமிகு நவகவிதை, ப.84

7. கந்தகப்பூக்கள், ப.11

8. மேலது, ப.6

9. மேலது, ப.11

10. பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், ப.38

11. உளியைத் தேடும் சிற்பி, ப.12

12. மேலது, ப.3

13. பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், ப.87

14. உளியைத் தேடும் சிற்பி, ப.24

15. பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், ப.91

16. மேலது, பக்.98,99

17. இறந்தவர்களை அலங்கரிப்பவன், பக்.20,21

18. பறத்தலுக்கான பாடல், ப.18

19. உளியைத் தேடும் சிற்பி, ப.43

20. பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், ப.59

பயன்பட்ட நூல்கள்

1. பாண்டூ - பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், கந்தகப்பூக்கள் பதிப்பகம், சிவகாசி. 2013

2. ஸ்ரீபதி, - பறத்தலுக்கான பாடல், கந்தகப்பூக்கள் பதிப்பகம், சிவகாசி. 2015

3. சிவகாசி ஹென்றி - உளியைத் தேடும் சிற்பி, மரியா பதிப்பகம், சிவகாசி. 2013

4. பாம்பாட்டி சித்தன் - இறந்தவர்களை அலங்கரிப்பவன், காலச்சுவடு பதிப்பகம், சென்னை. 2014

5. அப்துல்ரகுமான் - சோதிமிகு கவிதை, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை.2004

6. திருஞானசம்பந்தம் - நன்னூல் (காண்டிகை உரை), கதிர்பதிப்பகம், திருவையாறு.2008

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p101.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License